[மீண்டும் ஏமாற்றமளித்த இந்திய அணி!

public

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

மலேசியாவில் மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் முதல் போட்டியில் அர்ஜென்டினாவிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற இங்கிலாந்திற்கு இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் தொடக்கம் முதல் இரண்டு அணி வீரர்களும் சமமாக விளையாடினர். ஆனால் ஆஸ்திரேலிய அணிக்குக் கிடைத்த முதல் பெனல்ட்டி வாய்ப்பிற்குப் பின்னர் இந்திய அணி சரிவினை காணத் தொடங்கியது. அந்த பெனால்ட்டி வாய்ப்பிற்கு பின்னர் ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ச்சியாக நான்கு கோல்களை அடித்தனர். எனவே இந்திய அணி 0-4 என்ற கோல் கணக்கில் இருந்தது. அதன் பின்னர் இந்திய வீரர் சுமித் குமார் மற்றும் ராமன்தீப் சிங் இருவரும் தலா ஒரு கோல் அடித்ததால் இந்திய அணிக்கு நம்பிக்கை கிடைத்தது.

இருப்பினும் சிறிது நேரம் மட்டுமே மீதமிருந்த நிலையில் இந்திய வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. எனவே ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் அதில் வெற்றி பெற்றாலும், இறுதிப் போட்டி வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *