போஸ் பாண்டிக்கும் துண்டை போடுங்க: அப்டேட் குமாரு

public

சர்கார் படம் மாதிரி சிவகார்த்திகேயனும் ஒரு விரல் புரட்சி பண்ணி முதலமைச்சர் ஆயிடுவாருன்னு பயந்துபோய் அவரை ஓட்டு போட விட்டுட்டாங்கன்னு அவர் ரசிகர் ஒருத்தர் என்ட்ட வந்து அன்னைக்கு பெருமையா சொன்னாரு. இன்னைக்கு என்னடான்னா யாரு அவரை ஓட்டு போடவிட்டதுன்னு கேட்டுகிட்டு இருக்காங்க. ஆனா சிவகார்த்திகேயன் மேல தப்பு இல்லைன்னு சொல்றாங்களாம். ஒருவேளை இவரையும் எதுலயாவது கோர்த்துவிட்டுட்டாங்கன்னா கோபத்துல மாற்றத்தை உருவாக்குறேன், வெற்றிடத்தை நிரப்புறேன்னு இறங்கி அடுத்த எலெக்‌ஷன்ல ரஜினிக்கு டஃப் கொடுப்பாருன்னு அவரு விசிறிங்க பேசிக்கிடுதாங்க. அப்டேட்டை பாருங்க..கட்சிக் கொடி டிசைன் பண்ண கொடுத்துட்டாங்களான்னு விசாரிச்சுட்டு வாரேன்.

**@Annaiinpillai**

ரஜினிக்கு வரலாறு தெரியுமா ? – சீமான்

# அடுத்தென்ன கதை சொல்ல தெரியுமானு தானே கேட்பிங்க ஆபிசர்!?

**@kumarfaculty**

வீட்டு வரி, தண்ணீர் வரி,தொழில் வரி கட்டும் பட்டியலில் எல்லாம் பெயர் விடுபட்டுப் போவதே இல்லை:(

**@ShahulH14423965**

உக்ரைனின் அதிபரான காமெடி நடிகர் – செய்தி..

எங்க நாட்டுல பிரதமரே காமெடி நடிகராய்ட்டாரு போவியா சொம்மா அனத்திக்கிட்டு!!!

**@Kozhiyaar**

தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு வண்டி ஓட்டுவதற்கு கால் ஊதியம் தான், ஓயாமல் ஹாரன் அடிப்பதற்கு தான் முக்கால் ஊதியம் போலும்!!!

**@ShivaP_Offl**

இன்றுடன் உங்களிடம் பேசுவதை நிறுத்தி கொள்பவர்கள்,

நாளை முதல் உங்களைபற்றி பேசுவதை தொடர்ந்து கொண்டேதான் இருப்பார்கள்….

**@parveenyunus**

ரிமோட் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் எழுந்து எழுந்து போய் சானலை மாத்தி தொப்பை குறைஞ்சிருக்குமோ..? # ஒரு டவுட்டு.

**@vickytalkz**

என்னடா நெனச்சிட்ருக்கிங்க எங்க போனாலும் குழந்தைங்கள அங்கிள் கிட்ட உக்காரு சாப்டலனா அங்கிள் தூக்கிட்டு போய்டுவாருனு ஒரு பப்ளிக் ப்ளேஸ்னு கூட பாக்காம அசிங்க படுத்துறிங்க 90ஸ் கிட்ஸ்னா அவ்ளோ இளக்காரமா போய்டுச்சு உங்களுக்கு

**@Kozhiyaar**

மழையில் நனைந்து விட வேண்டும் என்று எனக்குள் இருக்கும் குழந்தையும், நனைந்தால் நோய் வந்து விடுமோ என்று எனக்குள் இருக்கும் முதுமையும் ஒன்றோடொன்று போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன!!

**@ajmalnks**

வெடிகுண்டை விட மிக வலிமையானது வாக்காளர் அட்டை- பிரதமர் மோடி

ஆமா அடையாளமே தெரியாது.

**@ItsJokker**

சிங்கிளா இருக்கும் போது, “சனிக்கிழமை நைட்” மாதிரி இருந்த வாழ்க்கை தான்,

கல்யாணம் முடிச்சபிறகு

“மண்டே மார்னிங்” மாதிரி மாறிருது..!!!

**@parveenyunus**

அரசியல்வாதிகள் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள சட்டத்தில் இடமில்லை- போக்குவரத்து துறை # அப்படியே..சட்டைபாக்கெட்டுக்குள்ள வெளியே படம் தெரியற மாதிரி கட்சி தலைவர் போட்டோவை வைக்க சட்டத்தில் இடமில்லைனு சொன்னா நல்லா இருக்கும்.

**@shivaas_twitz**

முட்டைக்கோஸ் ரைஸ்க்கு, பிரைட் ரைஸ் என்று பெயர் வைத்தது யாரோ..?!

**@Kozhiyaar**

ஏங்க எனக்கு எப்ப வைர நெக்லஸ் வாங்கி தருவீங்க!?

அந்த பதினைந்து லட்சம் வந்த உடனே மா!!!

**@HAJAMYDEENNKS**

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறை திரும்பி பார்த்தால் அவை ஒருபோதும் விளையாட்டுத்தனமாக இருந்ததில்லை !

**@parveenyunus**

மே.வங்கத்தில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்- மம்தா # அப்ப..தூத்துக்குடியில ‘மக்ரூன்’ தான் கிடைக்குமா..?

**@manipmp**

ஒரு டவுனையே சுமந்து கொண்டு செல்வதால், அதற்கு டவுன் பஸ் என பெயர் வந்திருக்கலாம்

**@twittornewton**

நான் நல்லவன் என்று சொல்லி விட்டு மெத்தனமாக இருந்து விடக்கூடாது.

பல் விளக்குவது, குளிப்பது போன்றே, நல்லவனாக இருப்பதுவும், தினமும் நடைமுறைப் படுத்த வேண்டிய செயலே.

**@parveenyunus**

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களிக்க குறைந்தது 4 ஹிட் படங்களாவது கொடுத்திருக்க வேண்டுமோ..?

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *