{பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு கட்டணம் உயர்வு!

public

தமிழ்நாட்டில் பொதுமக்களின் பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்வது இலவசமாகச் செய்யப்பட்டும், சில சேவைகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டும்வருகிறது. இந்நிலையில் தற்போது பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்வதில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகச் சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. மேலும் ஆன்லைனிலும் பதிவு செய்யக் கட்டணம் கிடையாது.

மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் நலம்பெற்று வீட்டிற்குச் செல்லும்போது பிறப்புச் சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் ஏழை மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஒரு மாதம் வரைக்கும் பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்யாமல் அதன் பிறகு பதிவு செய்பவர்களுக்கு கட்டணம் ரூ.2இல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

30 நாட்களுக்கு மேல் ஒரு வருடம் வரை பதியாமல் இருப்பவர்களுக்கு ரூ.5இல் இருந்து ரூ.200 ஆகவும், ஒரு வருடத்திற்கு மேல் பதியாமல் இருப்பவர்களுக்கு ரூ.10இல் இருந்து ரூ. 500 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்கு மேல் பெயரைப் பதிவு செய்யாமல் இருப்பவர்களுக்கான கட்டணம் ரூ.5இல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

சிலர் பிறந்த தேதியை மாற்றிப் பதிவு செய்வதாலும், பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்யும்போது, முறைகேடுகளில் ஈடுபடுவதாலும் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு ஒப்புதலுடன் கடந்த அக்டோபர் மாதம் முதல் கட்டண உயர்வு நடைமுறையில் இருக்கிறது. அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தக் கட்டண உயர்வு ஏழை எளிய மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது” என்று குழந்தைச்சாமி தெரிவித்துள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *