பியார் பிரேமா காதல்: கல்லா கட்டுவதில் தடுமாற்றம்!

public

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நேற்று (ஆகஸ்ட் 10) வெளியான படம் பியார் பிரேமா காதல்.

முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படம் எந்த விதமான விளம்பரமும் இன்றி ரிலீஸ் ஆனது. ரோமியோ ஜுலியட், ஓ காதல் கண்மணி படங்களின் கலவையாக இளைஞர்களைக் குறிவைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்குத் திரையரங்குகளில் விஸ்வரூபம் 2 படத்திற்கு அடுத்தபடியாக ஓபனிங் இருந்தது.

புது முகங்கள் நடித்திருந்தாலும் படத்தின் உலக உரிமையை வாங்கியுள்ள ரவீந்திரன் தமிழகத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் விநியோகஸ்தர் என்பதால் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகள் எளிதில் கிடைத்திருக்கிறது.

நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது பியார் பிரேமா காதல்.

இளைஞர்கள் கவனம் இப்படத்தின் மீது திரும்பினால் வரும் நாட்களில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் போன்று வசூலைக் குவிக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *