பிஜிலி ரமேஷின் வெர்சன் 2 யார் தெரியுமா: அப்டேட் குமாரு

public

நேத்து நடந்த மேட்சுல கோலி அடிச்ச சதம் உலக லெவல்ல எல்லா பேட்ஸ்மேன்களையும் திரும்பி பார்க்க வச்சுருக்காம். ஒவ்வொருத்தரா ட்விட் போட்டுகிட்டு இருக்காங்க. ஆனா அதைவிட நேத்து காலையில அந்த அக்கா கொடுத்த பிரஸ் மீட் தான் இன்னும் ஒரு வாரத்துக்கு பசங்களுக்கு கான்சப்ட். அவ்ளோ மேட்டர் இருக்கு. பத்திரிக்கைகாரங்க கவனிக்காம மிஸ் பண்ணுனதை எல்லாம் எடுத்து நம்மாளுங்க கோர்த்து விட்ருக்காங்க. ஏற்கெனவே புயல் வேகத்துல ஆரம்பிச்சு புஸ்வானமாயிருச்சு. இதுல இன்னும் ரெண்டு நாள் லேட் ஆச்சு இவங்க போடுற மீம்ஸுல சீட்டு கிடையாது, வேணும்னா ஆதரவு மட்டும் கொடுங்கன்னு சொல்லிருவாங்கன்னு நினைக்கிறேன். அப்டேட்டை பாருங்க. இன்னொரு மீம் வந்துருக்கு என்னன்னு பார்த்துட்டு வாரேன்.

**@Kozhiyaar**

ஆறுதல் தந்து தேற்ற முடியாது பொழுது, சேர்ந்து அழுது விடுவது ஆறுதலாய் இருக்கும்!!

**@kumarfaculty**

காங்கிரஸ்காரர்களின் வளர்ப்பு சரியில்ல – தமிழிசை

இதுதான் சுய விமர்சனமோ?

**@parveenyunus**

கூட்டணியில் சேருமாறு எங்களை யாரும் மிரட்டவில்லை – செல்லூர் ராஜூ #

பாஜகவுக்கு சிரமமே கொடுக்காம சேர்ந்துட்டோம்னு சொல்றீங்களா..?

**@gips_twitz**

பிஜிலி ரமேஷின் நியூ வெர்சன் தான் பிரேமலதா

**@Naan_Saranallu**

அடுத்து என்ன பண்ணலாம்’னு

யோசிக்கும் போது நேற்றும் ஏதோ

யோசிச்சோமே என்றது மறந்து

போயிடுது

**@Annaiinpillai**

டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார் பாடகர்

மனோ # சிம்கார்டு இல்லாத செல்போனுக்கு எதுக்கு டாப்பப்பு?!

**@saravananucfc**

மலையேறினாலும் மச்சான் தயவு தேவைனு சொன்னவனையும் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள்னு சொன்னவங்களையும் நான் உடனே பார்க்கனும்…-கேப்டன் மைண்ட் வாய்ஸ்

**@gips_twitz**

மக்களவை தேர்தலில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.- செய்தி

அப்படியே அன்புமணி மாமியாருக்கும் ஒரு சீட்டு குடுத்தீங்கனா மாமியார் வீட்டுக்கு போகுற செலவு மிச்சமாகும் பார்லிமென்ட் லீவும் குறையும்

**@nandhu_twitts**

மறதிக்கு புருசன், பொண்டாட்டி, குழந்தைங்க, அப்பா, அம்மா’ங்குற பாகுபாடே தெரியாது..!!

**@ItsJokker**

சில பெயர்களுக்கான காரணங்களை அவர்களின் நடத்தையே சொல்லிவிடுகிறது.

“அற்புதம்மாள்” இத்தனை வருஷமா பிள்ளையோட விடுதலைக்காக அலையிற அந்த அம்மாவுக்காகவே, 7 பேர் விடுதலை செய்யப்படவேண்டும்.

**@sultan_Twitz**

வீட்டில் பெண் இருந்தால், 10 பேர் வந்து கேட்கத்தான் செய்வார்கள்! – பிரேமலதா #

மணப்பெண்ணை பெற்ற எந்த ஒரு பெற்றோர்களும் ஒரே நேரத்தில் இரண்டு மணமகனிடம் பேரம் பேசமாட்டார்கள்..?

**@shivaas_twitz**

நாம எல்லோருமே, டிவியில விளம்பரப்படுத்தப்படும் உப்பு, புளி, மிளகாய் இருக்கும் ஏதோ ஒரு டூத் பேஸ்ட்டை தான் பயன்படுத்துறோம்…

ஆனா, ஆளுக்கு ரெண்டு சொத்தை பல்லோட திரியிறோம்..!

**@Annaiinpillai**

மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று தேர்தல் பிரச்சாரம் செய்தார் அந்த மது கடை நடத்தும் அரசியல்வாதி!

**@nandhu_twitts**

வீட்டில் கணவன், மனைவிக்கு எதாவது வேலை இருந்து கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் சண்டை போட நேரமிருக்காது..!!

**@RahimGazzali**

டி.டி.வி. தினகரன் சட்டமன்ற அலுவலகத்தில் இரவில் வீசப்பட்ட 20 ரூபாய் நோட்டுகள்!

ஏதும் கிடைக்காத விரக்தியில் 20 ரூபாய் டோக்கனை வீசிட்டு போய்ட்டாங்கபோல!

**@amuduaratta**

பெண்களின் தைரியத்தை வீட்டிற்கு உள்ளேயும், ஆண்களின் தைரியத்தை வீட்டிற்கு வெளியேயும் காணலாம்.

**@pradeepbala23**

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 20 ரூபாய் நாணயம்,

முத்தல பத்து ரூபாய் நாணயம் செல்லுமா செல்லாத னு சொல்லுங்கடா…

**@saravananucfc**

அம்மா இல்லாததால் மோடிதான் எங்கள் டாடி:அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

தமிழ்நாட்டுக்கு உங்க அப்பா வந்தப்ப உங்களுக்கு தீணி வாங்கிட்டு வந்தாரா??

**@kumarfaculty**

திமுக கூட்டணியில் போதிய இடம் கிடைக்காததால் வைகோ அதிருப்தியில் உள்ளார் – தமிழிசை.

அதிமுக கூட்டணியில் உங்களுக்கு அதிக இடம் என்பதால் நீங்கள் அதிருப்தியில் இருப்பதாக வைகோ சொல்லுகிறார்.

**@gips_twitz**

செய்தியாளர்களை புன்னகையோடு எதிர்கொள்பவருடன் கூட்டணி – வேல்முருகன்

அப்படீனா நடிகர் மதன்பாப் கூட தான் கூட்டணி வைக்கனும்

**@shivaas_twitz**

ரொம்ப கூட்டணி கணக்கெல்லாம் போடாதீங்கய்யா…

ஏப்ரல், மே வெயிலுக்கு ஓட்டு போட நாங்கெல்லாம் உயிரோட இருப்போமானே தெரியல…

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *