பங்குகளை பேடிஎம்-இடம் விற்கும் ரிலையன்ஸ் கேபிடல்!

public

ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் தனது 1 சதவிகித பங்குகளை பேடிஎம் நிறுவனத்திடம் விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி சேவை நிறுவனமான ரிலையன்ஸ் கேபிடல், டிஜிட்டல் பரிவர்த்தனை தளத்தில் ஒரு சதவிகித பங்குகளைக் கொண்டுள்ளது. தற்போது அதன் பங்குகளை பேடிஎம்-இடம் விற்பதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே இதன் தொலைகாட்சி மற்றும் ரேடியோ வணிகத்தையும் விற்றிருப்பது குறிப்படத்தக்கது. பேடிஎம் நிறுவனம் தனது கடைசி நிதி திரட்டலில் 4.8 அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டிருந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் மும்மரமாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. வாங்குபவர் பெரும்பாலும் சீனாவின் மின்னணு வர்த்தக தளத்தின் உரிமையாளராக இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் தவிர, நிறுவனம் அதன் வர்த்தக நிதி மற்றும் வீட்டுக் கடன் இரண்டையும் பிரித்து வழங்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த நிதியாண்டு இறுதிக்குள் ரூ.450 – 50௦ கோடி வரை நிதியை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *