நிவின் – மூன்று வார்த்தையில் கொடுத்த மகிழ்ச்சி!

public

அதிகமாகக் கொண்டாடுவதுபோல் தோன்றுகிறதே என்று ஓர் எண்ணம் ஏற்பட்டாலும், ‘பரவாயில்லை இருக்கட்டுமே’ என்ற அசட்டையுடன் கடந்து செல்பவர்கள்தான் நிவின் பாலி ரசிகர்கள். சில படங்கள்தான் நடித்திருக்கிறார். அத்தனை பெரிய ஹிட் எல்லாம் இல்லை. ஆனாலும், நிவின் பாலிக்கான ரசிகர் கூட்டம் அதிகமானது. கடந்த ஆண்டு நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், கத்திக் கதறி ஓய்ந்து போயிருந்த ரசிகர்கள் நிவின் பாலி எண்ட்ரி கொடுத்ததும் கொடுத்த சத்தம் இப்போதும் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட ரசிகர்கள் அனைவருக்குமே ஒரு மகிழ்ச்சியான செய்தியை மூன்றே வார்த்தைகளில் தெரிவித்திருக்கிறார் நிவின் பாலி. அந்த வார்த்தை **It’s a Girl** என்பதுதான்.

நிவின் பாலிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறார். கர்ப்பமாக இருந்த நிவின் பாலியின் மனைவி ரின்னா, பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததை அவரது ட்விட்டர் அக்கவுண்டில் It’s a Girl என எழுதப்பட்ட பலூனின் ஃபோட்டோவை பதிவு செய்ததன் மூலம் ரசிகர்களுக்குத் தெரிவித்திருக்கிறார் நிவின் பாலி. ஏற்கெனவே தாவீத் பாலி என்ற ஒரு மகன் நிவினுக்கு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *