}நாற்காலியில் கட்டி வைத்து மாணவனுக்குப் பாடம்!

public

பஞ்சாப் மாநிலத்தில், மன வளர்ச்சி குன்றிய பள்ளி மாணவனை ஆசிரியர்கள் நாற்காலியில் கட்டி வைத்து பாடம் எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் சிறப்பு கல்விக்கான நவ்ஜிவனி பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் 125க்கும் மேற்பட்ட மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்கள். இங்கு சில நாட்களாக ஆசிரியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் சிறுவன் கட்டிப் போடப்பட்ட நிலையில் இருக்கும் வீடியோ உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி (டிசிபிஓ) மற்றும் மாவட்ட குழந்தைகள் நல வாரிய உறுப்பினர்கள் நேற்று (நவம்பர் 23) அந்தப் பள்ளிக்கு சென்றனர். ஆனால், அரசாங்க விடுமுறை என்பதால், அங்கு ஆசிரியர்களும் பெரும்பாலான மாணவர்களும் இல்லை. எனவே, குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் சிசிடிவி வீடியோ குறித்து பள்ளி முதல்வர் சசி பாலாவிடம் விசாரணை மேற்கொண்டனர். மாணவரை இதுபோல் சித்ரவதை செய்யவில்லை என அவர் கூறினார். போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள்தான் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பல மாதங்களாக சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.

மாநில குழந்தை உரிமைகள் ஆணையத்திடம் பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சிசிடிவி கேமராக்களின் குறைபாடுகள் குறித்தும் புகார் அளிக்கப்படும் என ஷைனா கபூர் தெரிவித்துள்ளார்.

பாட்டியாலா மாவட்ட ஆட்சியர், “சிறுவன் கட்டிப்போடப்பட்ட நிலையில் இருக்கும் வீடியோவை பார்த்தேன். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறுவனை சித்திரவதைசெய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *