சிறப்புக் கட்டுரை: ஆணாதிக்கக் கோட்டைகளை தகர்த்த தீர்ப்புகள்!

public

சேது ராமலிங்கம்

காலங்காலமாக கெட்டி தட்டிப்போய் இறுகிக் கிடந்த ஆணாதிக்கக் கோட்டைகளைத் தகர்த்து பெண்களின் உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் பல முற்போக்குத் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது, பெண்கள் அமைப்புகள் அரசியல் சக்திகளிடையே வரவேற்பையும் பழமைவாதிகளிடையே கடும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இத்தீர்ப்புகளுக்கு அரசியல் சாசன அமர்வு உள்ளிட்ட பல அமர்வுகளில் தலைமை தாங்கிய ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

முற்போக்கான தீர்ப்புகள்

பெண்களின் அடிப்படை மனித உரிமைகளுக்குத் தடைகளாக இருந்த மிகப்பழமை வாய்ந்த பழக்கங்கள், நடைமுறைகள், சட்டங்கள் மற்றும் விதிகள்ஆகியவற்றைத் தயக்கம் காட்டாமல் உடைத்தெறிந்து விட்டு பெண்ணுரிமைகளுக்கான தீிர்ப்புகளை வழங்கியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ஹாஜி அலி தர்கா தீர்ப்பு (2016) குல்ராக் குப்தாவழக்கு (2017) பிறப்புறுப்புச் சிதைப்பு வழக்கு (2018)தவறான உறவு வழக்கு (2018) முத்தலாக் வழக்கு(21018) சபரிமலை வழக்கு ஆகிய வழக்குகளில் ஆணுக்கு பெண் சமமானவர் என்ற பாலியல் நீதியின் அடிப்படையில் நீதி வழங்கப்பட்டது.

முதலாக 2016இல் ஹாஜி அலி தர்கா என்ற பள்ளிவாசலில் முஸ்லீம் பெண்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி டிஎஸ்.தாக்கூர் இந்துக் கோயில்களில் மட்டுமல்ல முஸ்லீம்களின் வழிபாட்டுத்தலங்களிலும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இப்பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டும். என்று கூறி பெண்களை தர்காவிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். தீர்ப்பளித்த அடுத்த வாரமே தா்காவின் அறக்கட்டளை நிர்வாகிகள், பெண்களை ஆண்களுக்கு சமமாக அனுமதிப்பதாக தீர்மானம் இயற்றி அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

2017இல் குல்ராக் குப்தா என்ற பார்சி சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேறு ஒரு மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணின் தந்தை மரணமடைந்து விட்டார் . அதனால் அவருடைய பார்சி சமூகத்தின்படி அந்த சமூகத்தின் அஞ்சலி செலுத்துவதற்கான அமைதிக்கூடத்திற்குள் செல்ல அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பார்சி தலைவர்களிடம் அவரை அனுமதிக்க உத்தரவிட்டார்.

முத்தலாக் குற்றமாகும்

2016 ஆகஸ்ட்டில் முத்தலாக் வழக்கின் விசாரணையில் கேஹர் மாவட்ட நீதிமன்றம் முத்தலாக் என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது, குரானுக்கு எதிரானது என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்த முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அமர்வு கூறுகையில்,இஸ்லாம் குரானுக்கு எதிராக இருக்க முடியாது. முத்தலாக் என்பது புனித குரானின் அடிப்படை அம்சங்களுக்கு எதிரானவை, இதன் விளைவாக இது ஷரியத் சட்டத்திற்கு எதிரானது என்றும், முத்தலாக் நடைமுறை,அரசியல் சட்டத்திலுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் கூறி அதை குற்றச்செயலாக்கி தீர்ப்பளித்தார். இது மதவாத சூழலில் தீர்ப்பு இந்துத்துவாவுக்கு சார்பானதாகும், சிறுபான்மையினரின் பண்பாட்டிற்கு எதிரான தீர்ப்பு என்ற அடிப்படையில் விமர்சனங்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முன் வைத்தனர். ஆனால் நாடு முழுவதும் உள்ள பெண்ணிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் தீர்ப்புக்கு ஆதரவாக குரல் எழுப்பியதும் மதவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகளின் எதிர்ப்பு அடங்கி விட்டது.

தவறான உறவு குற்றமாகாது

ஒருவர் மனைவியிடம் மற்றொரு ஆண் தவறான உறவு கொள்வது குற்றமாகாது என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இந்த வழக்கின் தீர்ப்பில், கணவர் என்பவர் மனைவியின் எஜமானர் அல்ல. மனைவியும் கணவரின் சொத்தோ அல்லது அடிமையோ கிடையாது. இந்த செயலைக் குற்றமாக்குவதும் அதில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை அளிப்பதும் மேலோட்டமாக பார்க்கும்போது பெண்களுக்கு சாதகமானதாக தோன்றலாம். ஆனால் இதில் கணவரின் சொத்து என்ற வகையில் அந்த சொத்தை மற்றவர் அனுபவிக்கக் கூடாது என்ற பார்வையே உள்ளது. இது காலனிய காலச் சட்டமே. இந்த செயலில் பாதிக்கப்படும் மனைவியோ அல்லது கணவரோ தீர்வாக விவாகாரத்து பெறலாம். மற்றபடி இதைக் குற்றமாக கருத முடியாது. இது ஒரு சிவில் பிரச்சினையே அன்றி குற்றமாகாது என்று கூறி அதைக் குற்றமெனக் கருதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவை ரத்து செய்தார்.

சமீபத்தில் அளித்த சபரிமலைக்கு பெண்களுக்கு அனுமதி அளித்த தீர்ப்பு பெண்களின் வழிபாட்டு உரிமையில் உள்ள சமத்துவத்தை வலியுறுத்தியது. மாதவிடாய் காலத்தில் பெண்களை தள்ளி வைப்பதையும் தீண்டாமை என அறிவித்தது. இந்த வழக்கின் விசாரணையின் தொடக்கத்திலேயே பெண்கள் சமத்துவமாக நடத்தப்படுவதில்லை என தீபக் மிஸ்ரா குறிப்பிட்டது பெண்ணுரிமை பேணுபவர்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மாதவிடாயும் ஆன்மீகமும்

மாதவிடாய் என்பது ஒரு பெண் தாய்மைப்பேறு அடைவதற்கான தகுதி அடைவதாகும். இதைத்தான் அறிவியலும் மருத்துவமும் வலியுறுத்துகிறது. ஆனால் அதை தீட்டாக கருதி அக்காலத்தில் பெண்கள் அடையும் வேதனைகளை பொருட்படுத்தாமல் அவர்களை ஒதுக்குவது என்பது மிகவும் கொடுமையானதாகும். எந்த மதமும் தாய்மைப்பேறு அடைவதற்கான தகுதியான மாதவிடாயை தீட்டு என்று கூறவில்லை. மாதவிடாய் அம்மன் வழிபாடுகளே தமிழகத்தில் பிரபலமாக உள்ளன.

உடல் சார்ந்த விசயங்கள், உணவுப்பழக்கங்கள், சொத்து, பட்டம், பதவி உள்ளிட்ட அனைத்து பௌதீக மற்றும் லௌகீக விசயங்களைத்தாண்டியதே ஆன்மீகம். இவர்கள் பெண்களை ஒதுக்கி வைப்பதை எப்படி ஆன்மீகம் என்று கூற முடியும்? மேலும் அய்யப்பன் பிரம்மச்சாரி என்பதால் அவரின் கோயிலுக்கு ஆண்கள் மட்டுமே வர வேண்டும் என்பதையும் ஆன்மீகவாதிகளே ஏற்றுக்கொள்வதில்லை. பிரம்மச்சாரியம் என்பது அனைத்தையும் கடந்த கடவுளுக்கு பொருந்தாது என்றும், அவரின் உடல் மனித உடலாக இருக்க முடியாது, அது தெய்வீகத்தன்மை வாய்ந்த உடல்(transcendal body) என்பதும் மனிதர்களுக்கு உள்ள விசயங்களை கடவுளுக்கு பொருத்துவதே தவறானதாகும் என்று இஸ்கான் போன்ற அமைப்புகள் தெரிவிக்கின்றன.

தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் மாதவிடாயை காரணம் காட்டி அவர்கள் சபரிமலைக்கு வந்தால் அதனால் கோயிலின் புனிதம் கெட்டு விடும் என்பது ஒரு வகை தீண்டாமை என்றும் அப்படி ஒதுக்குவது அரசியல் சட்டத்திலுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று கடுமையாகக் கூறியது வரவேற்கத் தகுந்ததாகும். ஒய்வு பெற்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தீர்ப்புகள் ஆணாதிக்கத்தின் கோட்டைகளை தகர்த்துள்ளன என்று மனித உரிமையாளர்களும் பெண்ணுரிமைச்செயல்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர்.

**ஆதாரங்கள்**

1. A Crusade for Women’s Rights – THE HINDU, 1 oct,2018.

2.எது ஆன்மீக வாழ்க்கை—இஸ்கான் வெளியீடு

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**

**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**

**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**

**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண் +91 6380977477**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *