கழுத்துக்குச் சுருக்கல்ல… – கவிஞர் சித்திரகுப்தன்

public

நீட்டுக்கு

விலக்கு

கேட்டாய்…

நீதிமன்றத்தில்

வழக்கு

போட்டாய்…

நீதியுரை

உரக்கக்

கேட்டாய்…

என்ன செய்ய…

ஏழைச் சொல்

எட்டவில்லை…

அம்பானி

வீட்டு

பெண்ணாய்

இருந்தால்…

அமித்ஷா

வந்து

பேசியிருப்பார்…

பிரியங்கா

சோப்ரா

பிரச்னை

என்றால்

பிரதமரே

பிரத்யேக

கவனம்

காட்டியிருப்பார்…

நீ எங்கள்

அன்றாடம்

காய்ச்சி

பிள்ளையாச்சே…

அதிலும்

ஆதிதிராவிட

கிள்ளையாச்சே…

அதனால்தான்…

உன் அழுகுரல்

அம்பலத்தில்

ஏறவில்லை…

அத்தனை

செவிகளும்

செவிடாகிப்

போயின…

சட்ட

சுத்திகளும்

நீதியைப்

பிரசவிக்க

மறுத்து

மலடாகிப்

போயின…

ஆனாலும்

எங்கள்

அறிவுக்களஞ்சியமே

நீ கட்டியது

உன் கழுத்துக்கு

சுருக்கல்ல…

காவிக்கட்சிக்குக்

கல்லறை

என்பது மட்டும்

சத்தியம்…

ஆணவத்து

மோடி அலட்சியம்

மாணவத்திடம்

அழியும் நிச்சயம்…

அனிதா

மரணம்

மனிதா

உன் புரட்சியின்

ஜனனம்!

கவிஞர் குறிப்பு:

மருது அழகுராஜ்… அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். இதழின் ஆசிரியராக இருந்து சித்திரகுப்தன் என்ற பெயரில் அந்த இதழில் அதிரடிக் கவிதைகள் எழுதியவர் மருது அழகுராஜ். கடந்த ஆகஸ்ட் மாதம், இவர் நமது எம்.ஜி.ஆர். இதழில், ‘கழகம் அழி… காவி அடி’ என்ற கவிதையில் பாஜகவைக் கடுமையாகத் தாக்கியிருந்தார். இதையடுத்து மருது அழகுராஜை ஆசிரியர் பதவியில் இருந்து நீக்கினார் தினகரன். இந்நிலையில், இப்போதும் தனது பேனாவை சமூக நீதிக்கு ஆதரவாகவும், ஆதிக்கத்துக்கு எதிராகவும் பயன்படுத்தி தன் நிலை என்ன என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் மருது அழகுராஜ்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *