`கடும் வறட்சி: வெட்டப்படும் மரங்கள்!

public

பருவ மழை பொய்த்து போனதால் நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சியால் கால்நடைகள் மடிந்து வருகிறது. வன விலங்குகள் நீர் தேடி ஊருக்குள் நுழைத்து வருகிறது.

இந்நிலையில், நிலத்தடி நீர் பற்றாக்குறைக் காரணமாகக் கேரளாவில் உள்ள அனைத்து அகாசியா மற்றும் யூக்கலிப்டஸ் மரங்களை வெட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது.

ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகவும், கேரளாவின் ஹரிதா கேரளா திட்டத்தின் கீழும் இது நடைபெறும். கேரளத்தில் உள்ள நீர் நிலைகள், ஆறுகள் மற்றும் குளங்களைத் தூர்வாரவும், குப்பைகளை ஒழிக்கவும் பினராயி விஜயன் தலைமையிலான அரசு திட்டமிட்டு கடந்த அக்டோபர் மாதம் அந்தத் திட்டத்துக்கு ‘பசுமை கேரளம்’ எனப் பெயரிட்டது குறிப்பிடத்தக்கது.

திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் (மே 4) நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் மாநிலம் முழுவதும் அரசாங்க நிலத்தில் உள்ள அனைத்து அகாசியா மற்றும் யூக்கலிப்டஸ் மரங்களையும் வெட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதற்குப் பதிலாக பழம் தரும் மரங்கள் மற்றும் மருத்துவத் தாவரங்கள் ஆகியவற்றை நடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

ஆராடான் முகமத்தின் அமைச்சரவையில் அகசியா மற்றும் யூக்கலிப்டஸ் மரங்கள் கேரள வன மேம்பாட்டுக் கழகத்தால் நடப்பட்டன. அணையின் அருகிலுள்ள அகஸ்திய கூடம் மலைகளின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் அவை செழித்து வளர்கின்றன. இப்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் மூலம் அவை அகற்றப்படவுள்ளதாக சமூக ஆர்வலர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

ஜூன் 5ஆம் தேதி, கேரள அரசு ஒரு கோடி மரங்களை நடுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக வனத்துறை 72 லட்சம் மரக்கன்றுகள், விவசாயத் துறை ஐந்து லட்சம் மற்றும் குடும்பஸ்ரீ வுமன் மிஷன் 23 லட்சம் மரக்கன்றுகள் தயார் செய்துள்ளது. 40 லட்சம் மரக்கன்றுகள் பள்ளி மாணவர்களால் நடப்படும்.

திருவனந்தபுரம் பெப்பரா மற்றும் நெய்யர் அணைகள் அருகே அகசியா தோட்டங்கள் உள்ளன. இவைதான் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளன என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மரத் துண்டுகளுக்காக வனத்துறையால் நடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர், கர்நாடக மாநிலம் அகாசியா மற்றும் யூக்கலிப்டஸ் மரங்களை நடுவதற்கு தடை விதித்தது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *