`உலகக் கோப்பை: இந்தியா த்ரில் வெற்றி!

public

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 28ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூன் 22) இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரரான ரோஹித் ஷர்மா ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான லோகேஷ் ராகுல் 30 ரன்களுக்கும், விஜய் ஷங்கர் 29 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். விராட் கோலி 67 மற்றும் கேதார் ஜாதவ் 52 ரன்கள் எடுக்க, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் அணித் தரப்பில் முகமது நபி மற்றும் குல்புதின் நைப் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

எளிய இலக்காக இருந்தாலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே நெருக்கடி தந்தனர். நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ரஹ்மத் ஷா மற்றும் ஹஷ்மத்துல்லா ஷஹிதி ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் பும்ரா வெளியேற்றியதும் இந்திய அணிக்கு வெற்றி நம்பிக்கை இருந்தது. எனினும் அனுபவ வீரரான முகமது நபி கடைசி வரை போராடி இந்திய அணிக்கு நெருக்கடி தந்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முகமது ஷமி பந்து வீசினார். முதல் பந்தில் பவுண்டரி விரட்டிய நபி மூன்றாவது பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். கடைசி ஓவரை வீசிய ஷமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளும், பும்ரா, சஹல், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். கடைசி ஓவர்களில் சிக்கனமாகப் பந்துவீசி வெற்றிக்கு உதவிய பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணிக்கு இந்த வெற்றியானது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 50ஆவது வெற்றியாகும்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சோனியா கோரிக்கை… ஸ்டாலின் நிராகரிப்பு!](https://minnambalam.com/k/2019/06/22/70)**

**[அந்த ஜாம்பவான் போகட்டும்: தங்கத்தை சாடும் தினகரன்](https://minnambalam.com/k/2019/06/22/64)**

**[பாஜகவைத் தொடர்ந்து எதிர்ப்பேன்: தினகரன்](https://minnambalam.com/k/2019/06/22/23)**

**[காலேஸ்வரம் திட்டம்: ஆட்டத்தை மாற்றும் அற்புதம்!](https://minnambalam.com/k/2019/06/22/4)**

**[ஜூலை 1 : சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்!](https://minnambalam.com/k/2019/06/21/69)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *