உலகக் கோப்பை: இங்கிலாந்திடம் சரண்டரான ஆஃப்கானிஸ்தான்!

public

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து அணி.

மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. லீக் சுற்றின் 24ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூன் 18) பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை ஆஃப்கானிஸ்தான் எதிர்கொண்டது. சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து டாஸ் வென்றவுடன் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஜேசன் ராய்க்குப் பதிலாக தொடக்க வீரராகச் சேர்க்கப்பட்ட ஜேம்ஸ் வின்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தாலும் ஜானி பெய்ர்ஸ்டோவுடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார் ’ரன் மெஷின்’ ஜோ ரூட்.

இரண்டாவது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்த நிலையில் ஜானி பெய்ர்ஸ்டோவ் 90 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் ஆயின் மோர்கன். மோர்கனின் ஆட்டம் வழக்கத்தை விட மாறாக இருந்தது. தான் சந்தித்த அனைத்து பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டிக் கொண்டிருந்தார். குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷித் கானின் பந்துவீச்சை எளிதாக நொறுக்கித் தள்ளினார். 4 பவுண்டரிகளை மட்டுமே விரட்டிய மோர்கன் 17 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.

ஜோ ரூட் 88 ரன்களில் ஆட்டமிழந்தார். 71 பந்துகளில் 148 ரன்கள் விளாசிய மோர்கன் 47ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது. 9 ஒவர்கள் வீசிய ரஷித் கான் விக்கெட் எதுவும் வீழ்த்தாததோடு 110 ரன்களை வாரி வழங்கினார்.

இந்த இமாலய இலக்கை சேஸ் செய்வது கடினம் என்று உணர்ந்த ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள், 50 ஓவர்கள் முழுமையாகத் தாக்குப்பிடித்து விளையாடினாலே போதும் என்பதுபோல ஆடினர். இவர்களது அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து வீரர்களும் பந்து வீசினர். இருப்பினும் 50 ஓவர்கள் முழுமையாக விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஃப்கானிஸ்தான் அணியில் ஹஸ்மத்துல்லா சாஹிதி அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணித் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அடில் ரஷித் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அதிரடி சதம் விளாசிய ஆயின் மோர்கனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

**

மேலும் படிக்க

**

**[ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!](https://minnambalam.com/k/2019/06/18/51)**

**[டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?](https://minnambalam.com/k/2019/06/18/90)**

**[வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!](https://minnambalam.com/k/2019/06/18/59)**

**[ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!](https://minnambalam.com/k/2019/06/18/29)**

**[உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?](https://minnambalam.com/k/2019/06/17/69)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *