உணவை அளவாகப் பரிமாறுங்கள்: மத்திய அரசு அறிவுறுத்தல்!

public

கடந்த 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட உளகலாவிய பட்டினி அட்டவணையில், இந்தியாவில் 80 கோடி பேர் போதுமான உணவு இல்லாமல் வாழ்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில், இந்தியாவில் நட்சத்திர ஓட்டல்களில் பரிமாறப்படும் உணவுகள் பெரும்பாலும் முழுவதுமாக சாப்பிடாமலேயே குப்பைத் தொட்டிக்கு போய்க்கொண்டுருப்பதும் இங்குதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி, மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில், உணவகங்களில் உணவு வீணாவது குறித்து வருத்தம் தெரிவித்துப் பேசினார். இதையடுத்து, நுகர்வோர் நலன் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஏப்ரல் 11ம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொது அவர், நட்சத்திர ஓட்டல்களில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு அதிகமாக உணவு பரிமாறப்படுகிறது. இதனால், உணவு வீணாகிறது. இதனைத் தடுக்கும் வகையில் இனி உணவகங்களில் பரிமாறப்படும் உணவின் அளவு குறித்து நட்சத்திர ஓட்டல்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். இது குறித்து நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே பொருந்தும் சிறிய ஓட்டல்களுக்கு பொருந்தாது.” என்று கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *