ஆதார் கார்டு கட்டாயமாக்கம்: சீதாராம் யெச்சூரி கண்டனம்!

public

போலி பான் கார்டு பெறுவதைத் தடுப்பதற்காக ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் மற்றும் நிதி சட்டம் 2017 மூலம் வருமான வரிச் சட்டத்தில் 139-ஏஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் பான் எண் பெறுவதற்கும் வருமான வரித் தாக்கல் செய்வதற்கும் ஆதார் எண்ணைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என இந்தப் பிரிவு கூறுகிறது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமைப்பின் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான விவாதத்தின்போது, மத்திய அரசு, போலி பான் கார்டு பெறுவதைத் தடுப்பதற்காக ஆதார் கார்டை கட்டாயமாக்குவதாகக் கூறியுள்ளது.

இந்நிலையில், ஆதார் கார்டு கட்டாயமாக்கம் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று மே 3ஆம் தேதி தனது ட்விட்டரில் கூறியதாவது: “போலியான பான் கார்டுகள் நாடு முழுவதும் புழக்கத்தில் இருப்பதால், ஆதார் கார்டை கட்டாயமாக்குவது குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்தக் கூற்று, ஒவ்வொரு இந்தியரின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும். இது, தனி மனிதரின் சுதந்திரத்துக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்.

ஆதாரைக் கட்டாயமாக்குவதற்காக தொடர்ந்து மத்திய அரசு தனது இலக்குகளை மாற்றிக்கொண்டே வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறுவதற்காக வருமான வரிச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட புதிய பிரிவின் மூலம் இதனைச் செயல்படுத்த முயல்வது ஆபத்தாகும்” என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *