]ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி!

public

மகாராஷ்டிராவில் 30,000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் விரைவில் ஆங்கிலப் பயிற்சியளிக்கவுள்ளது.

இந்த ஆண்டில், கல்வியில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஆசிரியர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தவே இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில், மகாராஷ்டிராவின் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியின் தரத்தை மேம்படுத்த டாடா ட்ரஸ்ட் மற்றும் மாநில அரசுடன் இணைந்து பிரிட்டிஷ் கவுன்சில் இதேபோன்ற ஒரு முயற்சியில் இறங்கியது என்பது நினைவுகூரத்தக்கது.

2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில்,ஆசிரியர்கள் செயல்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆசிரியர்களின் ஆங்கில மொழித்திறன், பயிற்றுவிக்கும் திறன், அனுபவம் போன்றவை மேம்படுத்தப்பட்டது

தன்னார்வ ஒருங்கிணைப்பாளர்களால் நடத்தப்படும் இந்தக் குழுக்கள் நடைமுறையில் மாதத்திற்கு ஒருமுறை கூடுகிறது. அது மட்டுமல்லாமல், வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக ஆசிரியர்களின் மொழித்திறன் மேம்படுத்தப்படுவதோடு, அவர்களின் கருத்துகளும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து, பிரிட்டிஷ் கவுன்சிலின் மேற்கு இந்திய பகுதிக்கான இயக்குநரான ஹெலன் சில்வெஸ்டர் பேசுகையில், இதன் விளைவாக இத்திட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்களின் பயிற்றுவித்தல் மற்றும் கற்றல் திறன் மேம்பட்டுள்ளது” என்கிறார். 2021ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் இத்திட்டத்தின் வாயிலாக 48,000 ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க பிரிட்டிஷ் கவுன்சில் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதுவரையில், 18,000 ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கவுன்சிலின் 70 ஆண்டு நிறைவையொட்டி மகாராஷ்டிராவைச் சேர்ந்த 14 பெண்கள் இங்கிலாந்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் முதுநிலைக் கல்வி பெற உதவி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *