பிங்க் தேர்தல் அறிக்கை: பெண்களை நோக்கி பிரியங்கா

politics

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேச மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் அடுத்த வருடம் 2022 நடக்கிறது. தற்போது ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பலத்த முயற்சி செய்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் உத்திரப் பிரதேச மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி பெண்களைக் குறிவைத்துக் களமிறங்கியுள்ளார்.

நேற்று (டிசம்பர் 8) பெண்களுக்கான (பிங்க் நிற) தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் சார்பில் அவர் லக்னோவில் வெளியிட்டார். அந்த நிகழ்வில் பேசிய பிரியங்கா காந்தி,

“பெண்களுக்கு அரசியலில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வரை இந்தியாவின் உண்மையான வளர்ச்சி கனவாகவே இருக்கும். இன்றைய நிலவரப்படி, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் 14% க்கும் குறைவான பெண் பிரதிநிதிகளே உள்ளனர். இதனால் வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், அரசு பணியிடங்களில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்”என்று தெரிவித்தார்.

வரவிருக்கும் உ.பி. தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் 40% டிக்கெட்டுகளை வழங்குமென்று அறிவித்திருக்கிறது குறிப்பிடத் தக்கது.

பெண்களுக்கான இந்தத் தேர்தல் அறிக்கையில், “ பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு எலக்ட்ரிக்கல் ஸ்கூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன்களை வழங்கப்படும், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம்( தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கிறது), கிராமப்புற சுகாதார ஊழியர்களாக (ஆஷா) பணிபுரியும் பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊதியம், போக்குவரத்து போன்ற ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் பணிகளில் பெண்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு, தொழிலாளர்களில் 50 சதவீத பெண்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மலிவான கடன்கள், பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை மற்றும் துன்பங்களுக்கு எதிராக உதவி பெற பெண்களுக்கான மாவட்ட அளவிலான ஹெல்ப்லைன், மாநிலத்தின் 25 பெரிய நகரங்களில் நவீன வசதிகளுடன் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள், அனைத்து அரசு அலுவலகங்களிலும் குழந்தை பராமரிப்பு இல்லங்கள், பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு பரிமாற்றம், 14 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி, குழந்தை திருமணம், பெண்களின் இனப்பெருக்க உரிமைகள் உள்ளிட்டவை இடம்பெறும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு மூன்று எரிவாயு சிலிண்டர்கள் இலவசம், பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு மற்றும் வன்முறை புகார்களை பதிவு செய்யாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க தனி சட்டம், பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை கட்டண சிகிச்சை “ஆகிய முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

உ.பி. அரசியலில் ஜாதி மற்றும் மதம் ஆகியவையே ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் பெண்களின் ஆதிக்கத்தை அதிகரிக்க முயற்சிப்பதாக பிரியங்கா கூறினார்.

இந்தியாவின் முதல் பிரதமராக இந்திரா காந்தியையும், முதல் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டில் ஆகிய பெண்களை நாட்டுக்கு வழங்கியது காங்கிரஸ் கட்சிதான். நான் எங்கு சென்றாலும், அனைத்து தரப்பு பெண்களையும் சந்தித்து அவர்களுடன் தொடர்பு கொண்டு இரண்டு முடிவுகளை எடுத்துள்ளேன். பெண்கள் இரண்டு காரணங்களால் பாதிக்கப்படுகிறார்கள். ஒன்று அவர்களுக்கு அதிகாரம் இல்லை, மற்றொன்று இந்த சமூக அமைப்பு அவர்களைத் தோல்வியடையச் செய்கிறது. பெண்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர் இதை வெறுக்கிறார்கள் மற்றும் ஒரு மாற்றத்திற்காக ஏங்குகிறார்கள். இந்த பிங்க் தேர்தல் அறிக்கை அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், அவர்களின் கட்டுகளை உடைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் உ.பி. தேர்தலுக்கான பொதுவான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிடும்” என்றும் பிரியங்கா கூறினார்.

பிரியங்காவின் இந்த பெண்களை நோக்கிய பயணம் உபியில் காங்கிரசுக்கு திருப்புமுனையை ஏற்படுத்துமா என்பதை தேர்தல் களம் சொல்லும்.

**ஆரா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *