விளையாட்டாக செய்துவிட்டேன்: வருத்தம் தெரிவித்த துரைமுருகன்

politics

ராஜீவ்காந்தி நினைவிடத்தில் எடுக்கப்பட்ட டிக் டாக் வீடியோ தொடர்பாக சாட்டை துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி நிர்வாகியான சாட்டை துரைமுருகன், சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் டிக் டாக்கில் வசனம் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, துரைமுருகனுக்கு எதிராக காவல் துறையில் புகாரும் அளித்தனர். ஏற்கனவே ராஜீவ் காந்தியை கொன்றது நாங்கள்தான் என சீமான் பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு டிக் டாக் வீடியோ வெளியிட்டது சர்ச்சையானது. மேலும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக நேற்று (மார்ச் 3) விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்ட துரைமுருகன், இரண்டு நாட்கள் முன்பு ஸ்ரீபெரும்புதூர் சென்றிருந்தேன். ராஜீவ்காந்தி நினைவிடத்தில் டிக் டாக் வீடியோ பதிவு செய்து வெளியிட்டேன். சரியாக ஒரு மணி நேரத்திற்குள் அதை டெலிட் செய்துவிட்டேன். ஆனால், அதற்கு முன்னதாகவே அதனை டவுன்லோட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர். இதைப் பார்த்துவிட்டு ராஜீவ்காந்தியை நேசிக்கக்கூடியவர்கள் என்னை அழைத்து, ‘நீங்கள் இப்படி செய்வீர்கள் என எதிர்பார்க்கவில்லை’ என்று சொன்னார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தியை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதோ, அசிங்கப்படுத்த வேண்டும் என்பதோ தன்னுடைய நோக்கமில்லை என்று கூறிய துரைமுருகன், “அது சாதாரணமாக விளையாட்டுத் தனமாக செய்தது. அங்கு சென்றிருந்தோம் என்பதால் எடுத்தேன். தவறு என்பதால் டெலிட் செய்துவிட்டேன். வீடியோவால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். இனிமேல் இதுபோன்ற செயல்கள் நடக்காது” என்று தெரிவித்துள்ளார்.

**எழில்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *