gautama sigamani appeared in court

அமலாக்கத் துறை வழக்கு : பொன்முடி மகன் ஆஜர்!

அரசியல்

அமலாக்கத் துறை பதிவு செய்த சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் சென்னை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் திமுக எம்.பி.கவுதம சிகாமணி இன்று (ஜனவரி 24) ஆஜரானார்.

கடந்த 2006-2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் அருகே பூத்துறையில் உள்ள செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கை அடிப்படையாக  கொண்டுஅமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது.

பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி, செம்மண் குவாரி வழக்கில் தொடர்புடைய கே.எஸ்.ராஜ மகேந்திரன், வி.ஜெயச்சந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ்.பிசினஸ் ஹவுஸ் நிறுவனம் ஆகிய ஆறு பேருக்கு எதிராக 90 பக்க குற்றப்பத்திரிக்கையை  நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிகையின் நகல்கள் கவுதம சிகாமணி தரப்புக்கும் வழங்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று (ஜனவரி 24) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம சிகாமணி உட்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் நேரில் ஆஜராகினர்.

குற்றப்பத்திரிகை ஆவணங்களில் சில பக்கங்களில் உள்ள விவரங்கள் தெளிவில்லாமல் உள்ளது என குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, இதுதொடர்பாக பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு கால அவகாசம் வழங்கினார்.

இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

INDvsENG : பாகிஸ்தான் வம்சாவளி வீரருக்கு வந்த சிக்கல்… ஸ்டோக்ஸ் விரக்தி!

இந்தியாவில் அறிமுகமானது Hero Xtreme 125R… கலர், விலை, சிறப்பம்சங்கள் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *