அமேதி போன்று வயநாட்டிலும் ராகுல் வெளியேற்றப்படுவார் : மோடி

அரசியல் இந்தியா

அமேதி தொகுதியை போல வயநாடு தொகுதியில் இருந்தும் ராகுல் காந்தி வெளியேற்றப்படுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

வரும் 26ஆம் தேதி கேரளாவில் தேர்தல் நடைபெறுகிறது. அதைதொடர்ந்து ஜூன் 1 வரை பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த முறை பாஜக 150 இடங்களில் தான் வரும் என்று கூறி வருகிறார்.

இந்தசூழலில் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி பகுதியில் இன்று (ஏப்ரல் 20) பேசிய பிரதமர் மோடி, “மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு தைரியம் இல்லாமல் மக்களவையில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் தலைவர்கள் மாறுகிறார்கள். இதன்மூலம் காங்கிரஸ் தேர்தல் முடிவில் நம்பிக்கையின்மையை கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தான் சோனியா காந்தியின் பெயரை குறிப்பிடாமல் பேசியுள்ளார் மோடி.

ராகுல் காந்தி குறித்து பேசிய பிரதமர், “ அமேதி தொகுதியில் தோல்வியடைந்த அவர், கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கும் அவர் தோல்வி அடைவார். தேர்தலுக்குப் பிறகு வேறு பாதுகாப்பான இடத்தை தேடிக் கொள்ள வேண்டும்” என்று விமர்சித்தார்.

இந்தியா கூட்டணி குறித்து பேசிய மோடி, “ஊழல் நடைமுறைகளைப் பாதுகாக்க இந்தியா கூட்டணி உருவாகியிருக்கிறது. சுயநல கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்துள்ளன.

முதல்கட்ட தேர்தலிலேயே அவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு சண்டை வெடிக்கும்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கவினுடன் மோதும் சந்தானம்… பாக்ஸ் ஆபிஸ் ‘கிங்’காக மாறப்போவது யார்?

திருச்சி: துரைமுருகன் எச்சரிக்கை…தடுமாறிய அதிமுக!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *