தமிழ்நாட்டில் ஆற்று மணல் மற்றும் சவடு மண் கான்ட்ராக்ட்களை கையில் வைத்திருப்பதில் முக்கியமானவர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மற்றும் கரிகாலன் ஆகியோர்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் முக்கிய கான்ட்ராக்ட்கள் இவர்கள் கையில்தான் இருந்தன. அது திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் மாறாமல் அப்படியே தொடர்கிறது.
இதனையொட்டித்தான் அவர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினரின் ரெய்டு நடந்தது.
இந்த மணல் காண்ட்ராக்டர்களில் ஒருவரான கரிகாலனின் தம்பி தான் திருச்சி தொகுதியின் அதிமுக வேட்பாளர் கருப்பையா. திருச்சி தொகுதியை யாருக்கு கொடுப்பது என்ற போது, இவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி அதை வாங்கி விட்டனர்.
பிரச்சாரத்திற்கு பெரிய அளவில் செலவு செய்து திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு ஒரு டஃப் ஃபைட் கொடுத்தார்கள்.
கடைசி நேரத்தில் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுப்பதற்கு பணத்தை தயார் செய்து வைத்திருந்தனர். இந்த தகவல் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோருக்குச் சென்றதும், நம்ம ஆட்சியில் சம்பாதித்து விட்டு, நம்ம கூட்டணிக்கு எதிராகவே வேலை செய்கிறார்களா என்று டென்ஷனாகி பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள்.
இதனையடுத்து கரிகாலனிடம் பேசிய துரைமுருகன், தேர்தலில் நின்னீங்க ரைட்டு…ஆனால் ஓட்டுக்கு பணம் கொடுத்தா தொடர்ந்து தொழில் செய்ய முடியாது பாத்துக்கோங்க…என்று அவரது பாணியில் சொல்லியிருக்கிறார்.
அதன் பின்னால் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்கும் திட்டத்தினை அதிமுக தரப்பு நிறுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியிலிருந்து ஓட்டுக்கு 250 ரூபாய் திருச்சி தொகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நேற்றே ஏன் கேட்கவில்லை? தமிழிசைக்கு கி. வீரமணி கேள்வி!
ஜாபர் சாதிக் வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
சீண்டிய ராகுல் காந்தி… பினராயி விஜயன் பதிலடி : இந்தியா கூட்டணியில் சலசலப்பு!