இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவைக் கௌரவிக்கக் காங்கிரசார் யாரும் ஏன் அவரது பெயரைத் துணை பெயராகப் பயன்படுத்தவில்லை என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
மாநிலங்களவையில் இன்று (பிப்ரவரி 9) குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்தார்.
எதிர்க்கட்சிகளின் இடைவிடாத முழக்கத்துக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ‘எங்களின் திட்டங்களுக்கான பெயர் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
சமஸ்கிருத வார்த்தைகளின் பயன்பாடு குறித்தும் கேள்வி எழுப்பப்படுகின்றன. கடந்த ஆட்சியில் 600க்கும் மேற்பட்ட திட்டங்களுக்குக் காந்தி நேரு பெயர் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் நேரு வழி வந்தவர்கள் அவரது பெயரைத் துணை பெயராக ஏன் வைத்துக்கொள்ளவில்லை. நேருவின் பெயரை எங்கேயாவது குறிப்பிடத் தவறினால் வருத்தப்படும் அவர்களுக்கு அவரது பெயரைப் பயன்படுத்துவதில் என்ன வெட்கம் இருக்கிறது.
ஜவஹர்லால் நேரு சிறந்த மனிதர் அப்படி இருக்க அவரது பெயரைப் பயன்படுத்த ஏன் தயங்குகிறார்கள். இந்த நாடு ஒரு குடும்பத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல’ என கடுமையாக விமர்சித்தார்.
இன்றைய கூட்டத்தொடரின் போது அமைதியாக இருக்கும்படி எதிர்க்கட்சி எம்.பி.களுக்கு மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தங்கார் எச்சரித்தும் தொடர் அமளியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
பரந்தூர் விமான நிலையம்: டெண்டர் அவகாசம் நீட்டிப்பு!
“பணம் உலகை காலி பண்ணிடும்” : பிச்சைக்காரன் 2 அப்டேட் வெளியீடு!