“செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சர்” – அரசாணை வெளியீடு!

அரசியல்

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு இன்று (ஜூன் 16) அரசாணை பிறப்பித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தற்போது நெஞ்சு வலி காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் செந்தில் பாலாஜி நிர்வகித்து வந்த துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு பகிர்ந்தளிக்கவும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்றும் முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார்.

இந்த கடிதத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தவறானது என்று கூறி திருப்பி அனுப்பினார். இதனை தொடர்ந்து தமிழக அரசு மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப்பியது.

இந்தநிலையில் ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட அறிவிப்பில், முதலமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில் செந்தில்பாலாஜி வசம் இருந்த மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு துறையை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூடுதலாக கவனிப்பார்.

செந்தில்பாலாஜி வகித்து வந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி கூடுதலாக கவனிப்பார். இதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

எனினும், கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு தற்போது நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி உள்ளதால் தார்மீக அடிப்படையில் அவர் அமைச்சரவையில் தொடர்வதை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை ” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில்,

அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து நீடிப்பார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,

“அமைச்சர் செந்தில்‌ பாலாஜி பொறுப்பில்‌ இருந்த மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல்‌ நிலையின்‌ காரணமாக, நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசுக்கு மின்சாரத்‌ துறையும்‌,

வீட்டுவசதி மற்றும்‌ நகர்ப்புறவளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறையும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

செந்தில்‌ பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

ஆதிபுருஷ் திரைப்படம்: ரணகளமான தியேட்டர் வாசல்!

“தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலம்” – ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on ““செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சர்” – அரசாணை வெளியீடு!

  1. If CM is not dare to remove a minister from his office even after arrest then how can he control other ministers and role model to the people. It’s pathetic

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *