உத்தரப்பிரதேசம் அலிகர் நகரின் அரசு மருத்துவமனைகளில் கருத்தடை சிகிச்சை செய்துகொண்ட 82 பெண்களில் 81 பேர் மீண்டும் கருவுற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றிருந்தது. இங்கு 2021-22-ல் 4,800, 2022-23-ல் 5,240 மற்றும் 2023-24-ல் 6,084 ஆண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதேசமயம், இம்மாவட்டத்தில் கருத்தடை சிகிச்சை செய்துகொண்ட பெண்களில் 99 சதவிகிதம் பேர் மீண்டும் குறிப்பிட்ட காலங்களுக்குள் கருவுறுவது வழக்கமாகவும் இருந்துள்ளது.
இந்தப் பிரச்சினைகள் மீதான ஆலோசனை கூட்டம் அலிகர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் நீரஜ் தியாகி தலைமையில் அலிகரில் நடைபெற்றது. கடந்த 2010 முதல் 2023-ம் ஆண்டுகள் வரையில் 82 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அரசு மருத்துவமனைகளில் நடந்த இந்தச் சிகிச்சைகளில் 81 பெண்கள் மீண்டும் கருவுற்றது தெரியவந்துள்ளது. இதன் மீதான மருத்துவ அறிக்கை குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 81 பெண்களுக்கும் அரசு உதவித் தொகைகளும் அளிக்கப்படுகின்றன.
இதுபோல், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்த பின்பும் கருவுறும் பெண்களுக்கு தலா ரூ.60,000 அளிக்கப்படுகிறது. இவற்றில் ரூ.30,000 உபி அரசாலும், மீதம் மத்திய அரசின் மருத்துவ நலத் திட்டத்திலும் அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் பெண்கள் உயிர் நீத்தால், ரூ.2 லட்சம் அளிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..
டிஜிட்டல் திண்ணை: கண்டுகொள்ளாத அண்ணாமலை… நயினாரின் எம்.எல்.ஏ. பதவிக்கும் ஆபத்தா?
இந்த பிரச்சனை அவருக்கும் தெரிஞ்சிருச்சா: அப்டேட் குமாரு
2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா தீபக் சஹார்?
அமேதி, ரேபரேலியில் ராகுல் பிரியங்கா போட்டியா? ஜெய்ராம் ரமேஷ் பதில்!