நாட்டின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி, ஏப்ரல் மாதத்தில் 7.41 சதவிகிதம் உயர்ந்து, 7.86 கோடி டன்னாக உள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில் நிலக்கரி உற்பத்தியானது 73.26 மில்லியன் டன்னாக இருந்தது. 2024 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.869 கோடி டன் எட்டியது என்று நிலக்கரி அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதத்தில், கோல் இந்தியா லிமிடெட் 6.178 கோடி டன் உற்பத்தியை செய்தது. இது கடந்த ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 7.31 சதவிகித வளர்ச்சி ஆகும். அதே வேளையில் இது கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் இது 5.757 கோடி டன்னாக இருந்தது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 80 சதவிகிதத்தை கோல் இந்தியா நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அதிக நிலக்கரி உற்பத்தி செய்யும் மாநிலமாக ஜார்கண்ட் உள்ளது. அதைத் தொடர்ந்து ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் உள்ளன. உலகின் மிகப்பெரிய நிலக்கரி இருப்புகளைக் கொண்ட நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி உற்பத்தியாளராக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..
டிஜிட்டல் திண்ணை: கண்டுகொள்ளாத அண்ணாமலை… நயினாரின் எம்.எல்.ஏ. பதவிக்கும் ஆபத்தா?
இந்த பிரச்சனை அவருக்கும் தெரிஞ்சிருச்சா: அப்டேட் குமாரு
ருதுராஜ் மிஸ்ஸிங்…. சுப்மன் கில் ஃபார்ம்-அவுட்: தேர்வுக் குழுவை விளாசிய ஸ்ரீகாந்த்