Action against Vijayatharani MLA

”விஜயதரணி மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை” : செல்வ பெருந்தகை

அரசியல்

“பாஜகவில் இணைந்த விஜயதரணியை எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு கடிதம் அளிப்போம்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று (பிப்ரவரி 24) பாஜகவில் இணைந்தார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ பதவியை இழப்பார்!

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “விஜயதரணி பாஜகவில் இணைந்தது துரதிர்ஷ்டவசமானது. மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு அவர் திரும்பி வருவார். மக்கள் பணியை செய்யவில்லை என்றாலும் அவரை மரியாதையுடன் நடத்தினோம். ஒருவர் பாஜகவில் இணைந்ததால் இந்தியா கூட்டணிக்கு எந்தப் பின்னடைவும் இல்லை.

கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் தனது எம்.எல்.ஏ பதவியை இழப்பார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

விஜயதரணி துரோகம் செய்துவிட்டார்!

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேசுகையில், ”விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏவாக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டிந்தார். மகிளா காங்கிரஸ் தலைவியாகவும் அவர் பொறுப்பு வகித்தார். சட்டமன்றத்தின் கட்சியின் தலைமை கொறடாவாகவும் இருந்தார்.

இதற்கு மேல் ஒரு கட்சி என்ன தர முடியும். காங்கிரஸில் எத்தனையோ தொண்டர்கள் பணியாற்றி வரும் நிலையில், விஜயதரணிக்கு தொடர்ந்து காங்கிரஸில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 15 ஆண்டுகளாக விளவங்கோடு தொகுதி மக்கள் பாஜகவை ஏற்க மறுத்து காங்கிரஸுக்கு வாக்களித்தனர். தற்போது அந்த மக்களுக்கு விஜயதரணி துரோகம் செய்துவிட்டார். இது மன்னிக்க முடியாத குற்றமாக இருக்கும்.

அண்ணாமலையும், எல்.முருகனும். ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாதவர்கள். அந்த பாஜகவில் விஜயதரணி இணைந்தது, புதைகுழியில் விழுந்ததற்கும் சமம்.

எம்.எல்.ஏ பதவியை விஜயதரணி ராஜினாமா செய்யாவிடில் கட்சித்தாவல் தடைச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். விளவங்கோடு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பாஜகவில் இணைந்த விஜயதரணி- பறிபோகும் எம்.எல்.ஏ. பதவி- கட்சித் தாவல் தடைச் சட்டம் சொல்வது என்ன?

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி

+1
1
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

1 thought on “”விஜயதரணி மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை” : செல்வ பெருந்தகை

  1. சொந்த பேர வைய்யிடா நாய!
    அதென்ன செல்வ பெரும் தொகை..
    வெக்கமா இல்ல! அந்த ணனியா குடும்ப ப
    பொம்பளக்கும்…நீ ஒரு எச்ச..
    உன் பதவியால மிச்சம் சொல்லல..பழய கேஸ் வரைக்கும்.,கண்ணாடி கணவுகள்..ஓடுவோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *