”நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் முன் இதை செய்யுங்கள்” : சாய்னா நேவாலுக்கு அமைச்சர் பதில்!

அரசியல் விளையாட்டு

‘மோடிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?’ என்ற புத்தகத்தை சமூக வலைத்தளத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பதிவிட்டிருந்த நிலையில், அவருக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு மக்கள் வாக்களிக்க 101 காரணங்கள் என்ற புத்தகத்தை பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் கடந்த 1ம் தேதி பதிவிட்டிருந்தார்.

அதில் ”சாந்தனு குப்தாவின் ‘நான் மோடிக்கு வாக்களிக்க 101 காரணங்கள்’ வெளியீட்டைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என பதிவிட்டிருந்தார்.

அவரது இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (மே 7) இரவு அவரிடம் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் அவர், ”நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் முன், “மிஸ்டர் மோடி, உங்களுக்காக தேசம் முன்வைக்கும் 108 கேள்விகள்” (Mr. Modi, THE NATION HAS 108 QUESTIONS FOR YOU) என்ற புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும். அதன் பின்னர் நீங்கள் உண்மையிலேயே பக்கச் சார்பற்றவர் மற்றும் நாட்டை நேசிப்பவர் என்று நம்பினால், உங்கள் அரசியல் முதலாளியிடம்(பிரதமர் மோடி) எனது கேள்விகளுக்கு பதில் பெற்று தாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவுடன் அந்த புத்தகத்தை ஆன்லைன் மூலம் பெறுவதற்கான லிங்கையும் இணைத்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் எழுதிய இந்த புத்தகமானது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் 108 கேள்விகளை முன்வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சவுக்கு சங்கர் மீது பெண் பத்திரிகையாளர் புகார்!

சாதித்து காட்டிய சின்னதுரை… பாராட்டிய பா. ரஞ்சித்

+1
0
+1
0
+1
0
+1
8
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *