சவுக்கு சங்கர் மீது பெண் பத்திரிகையாளர் புகார்!

தமிழகம்

கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில்  இன்று (மே 8)  ஆஜராக உள்ளார். இந்த நிலையில் அவர் மீது பெண் பத்திரிகையாளர் புகாரளித்துள்ளார்.

யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேனியில் அவரை கைது செய்தனர்.

அப்போது, அவர் வந்த காரில் கஞ்சா வைத்திருந்ததாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மகேந்திரன் என்ற இளைஞர் கைது, அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜராகிறார்.

இதற்கிடையே தனியார் செய்தி தொலைக்காட்சியில் நியூஸ் எடிட்டராக பணிபுரிந்து வரும் மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர், சென்னை மாநகர குற்ற பிரிவில் சவுக்கு சங்கருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

அதில், கோலமாவு சந்தியா என்ற பெயரில் இழிவாக எழுதிய கட்டுரை மற்றும் அவர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை சவுக்கு சங்கர் தனது இணைய‌ பக்கத்தில் வெளியிட்டதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன்படி 294 பி (ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துதல்), 354டி (அனுமதியின்றி பின்தொடர்தல்), 506(1) (குற்றவியல் மிரட்டல்), 509 (பெண்ணை தவறான நோக்கத்தில் அவமதித்தல்) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கணவனை கட்டிவைத்து  மர்ம உறுப்பில் சிகரெட் சூடு: இளம்பெண் கைது!

ஹெல்த் டிப்ஸ் : திடீர் வீக்கம் வலி, அரிப்பு… சிகிச்சை அவசியமா?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *