மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. மாணவிகள் 4,55,017 பேர் மற்றும் மாணவர்கள் 4,59,303 பேர் என மொத்தம் 9,14,320 பேர் தேர்வெழுதினர்.
இவர்களில் தற்போது 8,35,614 (91.39%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,30,710 (94.66%) பேரும், மாணவர்கள் 4,04,904 (88.16%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு 9,12,620 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 8,21,994 (90.07%) பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.32% தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 87.45%, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 92.24%,, தனியார் பள்ளிகளில் 97.38%, பெண்கள் பள்ளிகளில் 94.38% மற்றும் ஆண்கள் பள்ளிகளில் 83.25% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12,638 பள்ளிகளில் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 3,718 பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 1,026 அரசுப் பள்ளிகள் அடங்கும்.
மொழிப்பாடத்தில் 95.55%, ஆங்கிலத்தில் 98.93%, கணிதத்தில் 95.54%, அறிவியலில் 95.75% மற்றும் சமூக அறிவியலில் 95.83% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் கணிதத்தில் 3,649, அறிவியலில் 3,584, சமூக அறிவியலில் 320, ஆங்கிலத்தில் 89 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்
பெரம்பலூர் 97.67%, சிவகங்கை 97.53%, விருதுநகர் 96.22%, கன்னியாகுமரி 95.99%, தூத்துகுடி 95.58%.
மாற்றுத்திறனாளிகள் 10,808 பேர் தேர்வெழுதிய நிலையில் 9,703 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மோனிஷா
“துயர சம்பவத்திலும் விளம்பரம்” : ஆளுநரை விமர்சித்த முரசொலி
தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை!