கணவனை கட்டிவைத்து  மர்ம உறுப்பில் சிகரெட் சூடு: இளம்பெண் கைது!

Published On:

| By christopher

UP Woman Tortures Husband

உத்தரப்பிரதேசத்தில் கணவனை கட்டி வைத்து மர்ம உறுப்பில் சிகரெட்டால் சூடு போட்ட மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், சியோஹரா மாவட்டத்தில் உள்ள பிஜ்னோர் என்ற இடத்தை சேர்ந்தவர் மெகர் ஜஹன். இந்தப் பெண்ணுக்கும் மனன் சைதி என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமானவுடன் மெகர், தனது கணவனை தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்தி தனிக்குடித்தனம் சென்றார்.

தனிக்குடித்தனம் சென்ற நாளில் இருந்து மெகர் தினமும் தன் கணவனை அடித்து சித்ரவதை செய்துள்ளார். அதோடு மெகர், தன் கணவனின் கை மற்றும் கால்களைக் கட்டிவிட்டு சிகரெட்டால் உடம்பு முழுக்க சூடு போட்டுள்ளார். மேலும், மெகர், தன் கணவர் நெஞ்சில் ஏறி அமர்ந்து கொண்டு, அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யவும் முயன்றுள்ளார்.

இந்த நிகழ்வு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததை தொடர்ந்து வீடியோ பதிவுடன் சென்று கணவன் மனன், தன் மனைவி மீது போலீஸில் புகார் செய்துள்ளார். அவர் தனது புகாரில் கை, கால்களை கட்டிவிட்டு உடம்பு மற்றும் மர்ம உறுப்பில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும், சில நேரங்களில் போதைப் பொருளை கொடுத்துவிட்டு சித்ரவதை செய்ததாகவும் தனது மனைவி மீது புகார் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மெகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: பெர்ஃபியூம், டியோடரன்ட் இல்லாமல் வியர்வை வாடையை விரட்ட…

ஹெல்த் டிப்ஸ் : திடீர் வீக்கம் வலி, அரிப்பு… சிகிச்சை அவசியமா?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share