ஐசிசி தொடர்களில் ஒரு முக்கிய தொடராக கருதப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர், வரும் 2025-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடரை 2025 பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், பாகிஸ்தான் இந்த தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
அதை தொடர்ந்து, 2023 உலகக்கோப்பை தொடரில், புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களுக்குள் இருந்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய 7 நாடுகளும் இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கான வரைவு அட்டவணை குறித்த சில தகவல்கள் கடந்த வாரம் வெளியாகின. 15 போட்டிகள் கொண்ட இந்த தொடரை, கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், குரூப் பிரிவு ஆட்டத்தில் இந்தியா விளையாடவுள்ள 3 போட்டிகளையும் லாகூரிலேயே நடத்தவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு சென்று இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரிய துணை தலைவர் ராஜீவ் சுக்லா,
“இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கினால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று 2025 சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடும்”, என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம் இதே கேள்வி ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூரிடம் எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு அவர்,
“பாகிஸ்தானில் நடைபெறும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இந்தியாவை விளையாட வைத்து, பயங்கரவாதத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது, ஆனால் அது ஒருபோதும் நடக்காது”, என பதில் அளித்திருந்தார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
DC vs RR: வெற்றி பெற்ற டெல்லி… சுவாரஸ்யமடையும் ஐபிஎல் 2024…
ஜெயக்குமார் தனசிங் மரணம் : போலீசிடம் வாக்குமூலம் கடிதம் கொடுத்த தங்கபாலு
டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த யுஸ்வேந்திர சாஹல்