தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (மார்ச் 27) நிறைவடைந்த நிலையில், இன்று (மார்ச் 28) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி வேட்பாளருமான ஆ.ராசா, வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோரது மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏற்கப்பட்டுள்ளது. அதேபோல நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட சென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்கள், டி,ஆர்.பாலு ( ஸ்ரீபெரும்புதூர்), கனிமொழி (தூத்துக்குடி), தயாநிதி மாறன் (மத்திய சென்னை), தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை) ஆகியோரது வேட்புமனுக்களும், பாஜக வேட்பாளர்கள் தமிழிசை சவுந்தரராஜன் (தென் சென்னை), எல்.முருகன் (நீலகிரி), அண்ணாமலை (கோவை), வினோஜ் பி.செல்வம் ( மத்திய சென்னை) ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஜெயவர்தன் (தென் சென்னை), ராஜசேகர் (காஞ்சிபுரம்), விக்னேஷ் (சேலம்), லோகேஷ் தமிழ் செல்வன் ( நீலகிரி) ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் வேட்பாளர்கள் காளியம்மாள் (மயிலாடுதுறை), தேன்மொழி (பெரம்பலூர்), சத்யா (திருநெல்வேலி), ஜெயக்குமார் (நீலகிரி) வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
சேலம் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வ கணபதி, தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்புமனுக்கள் நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன், திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ, ராமநாதபுரம் வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு!
டிடிவி தினகரன், செல்வ கணபதி வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு!