தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 20-ஆம் தேதி துவங்கி நேற்றுடன் (மார்ச் 27) நிறைவடைந்தது. 1,400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்தநிலையில், வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் சேலம் தொகுதியில் போட்டியிடும் செல்வகணபதிக்கு சேலம் மேற்கு, வடக்கு என இரண்டு தொகுதிகளில் வாக்குரிமை இருப்பதால் அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உரிமம் இல்லாத நோட்டரி பப்ளிக் கையெழுத்துடன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதியின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா, வட சென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக வேட்பாளர்கள் தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன், அண்ணாமலை, அதிமுக வேட்பாளர்கள் ஜெயவர்தன், ராஜசேகர், விக்னேஷ் ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன், திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோரது வேட்புமனு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பானை சின்னம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மேல்முறையீடு!
ஆடுஜீவிதம் : அமலா பால் சம்பளம் இவ்வளவு தானா?