Wage Hike for 100 Day Employment Scheme

100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு!

தமிழகம்

மாநிலம் வாரியாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு இன்று (மார்ச் 28) அரசாணை வெளியிட்டுள்ளது.

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இத்திட்டம் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அறியப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்தவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 6 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றன. இதில் இணையும் பணியாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில், பணிகள் வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இந்நிலையில், இத்திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வந்த தினசரி ஊதியத்தை தற்போது உயர்த்தி  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், ஊரக வளர்ச்சித்துறை, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலை வேலை செய்பவர்களுக்கு ரூ.294ஆக இருந்த ஊதியம், தற்போது ரூ.319ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், மற்ற மாநிலங்களுக்கும் மாநில வாரியாக ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பானை சின்னம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மேல்முறையீடு!

அந்த புண்ணியவானுக்கு போன் போட்ட புண்ணியவான்: அப்டேட் குமாரு

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு!

  1. திரு ஆசிரியர் அவர்களுக்கு தெரிவிப்பது என்ன வென்றால், முகப்பில் தேதி மார்ச் 29 ஆக உள்ளது. அதனை மார்ச் 28 ஆக மாற்றவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *