புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் மோடி திறந்து வைக்க கூடாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தற்போது டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் 1927-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. உறுப்பினர்களின் வசதிக்காக புதிய நாடாளுமன்றம் கட்டட பணி 2020-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
இதில் மக்களவையில் 888 இருக்கைள், மாநிலங்களவையில் 300 இருக்கைகள், இரண்டு அவைகளின் கூட்டத்தொடரை நடத்துவதற்கு வசதியாக 1280 இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28-ஆம் தேதி திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார்.
இந்தநிலையில் புதிய நாடாளுமன்ற கடிடத்தை பிரதமர் திறந்து வைப்பது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் மோடி திறந்து வைக்க கூடாது” என்று தெரிவித்துள்ளது.
மே 28-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் தலைவர் சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை திறக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
செல்வம்
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி!