மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

பெண்கள் உதவி மையம்!

பெண்கள் உதவி மையம்!

பெண்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய, கோவை ரயில் நிலையத்தில் 24 மணி நேர உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக ரயில்களில் கொள்ளை, செயின் பறிப்பு என பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவந்தன. இவற்றைத் தடுக்க ரயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட வேண்டும், சிசிடிவி பொருத்த வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பது கேள்விக்குறியே.

இந்நிலையில் பெண்கள் பாதுகாப்புக்காகக் கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் 24 மணி நேர உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் விஜயகுமார், ”ரயில்களில் தனியாகப் பயணம் செய்யும் பெண்களிடம் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிவருகின்றனர். விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பல பெண்கள் ரயில்வே போலீசாரிடம் புகார் அளிக்காமல் சென்றுவிடுகின்றனர்.

இந்நிலையில், ரயிலில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்கக் கோவை ரயில் நிலையத்தில் 24 மணி நேரப் பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் 24 மணி நேரமும் 4 பெண் போலீசார் பணியில் இருப்பார்கள். இந்த நடவடிக்கையின் மூலம் குற்றச் சம்பவங்கள் குறையும் என்று நம்பப்படுகிறது. குற்றங்கள் மட்டுமின்றி ரயில் சம்பந்தமான தகவல், ரயிலில் உள்ள குறைகள் பற்றியும் புகார் அளிக்கலாம்.

182 என்ற உதவி எண்ணில் தொடர்புகொண்டும் புகார் கொடுக்கலாம்” என்று கூறியுள்ளார்.

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon