தமிழ் சினிமாவில் வேற்றுமொழி படங்களின் ஆதிக்கம்!

Published On:

| By Balaji

இந்த ஆண்டின் கடைசி இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் சினிமா உலகம் வேகமாக இயங்கி வருகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறையில் படத்தை வெளியிட்டால் கல்லா கட்டலாம் என்பது தயாரிப்பாளர்களின் நினைப்பு.

கடந்த 10ஆம் தேதி எட்டு படங்கள் வெளியானது. எல்லாப்படங்களும் திரையிட்ட வேகத்திலேயே வசூல் ரீதியாக முடங்கிப்போனது. நாளை எட்டுபடங்கள் வரை ரீலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் வேற்று மொழிப் படங்களுக்குத்தான் வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

ஹாலிவுட் படமான ‘ஸ்பைடர்மேன் – நோ வே ஹோம்’ இன்று( டிசம்பர் 16ம் ) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 2டி, 3டி தொழில் நுட்பங்களில் வெளியாகிறது. இதில் ஆங்கில மொழிப் படத்திற்கு மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை முன்பதிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோவாக ஸ்பைடர் மேன் இருப்பதே இதற்குக் காரணம்.

அடுத்து, அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்துள்ள தெலுங்குப் படமான ‘புஷ்பா’ தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு டிசம்பர் 17ஆம் தேதி 400க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாக உள்ளது.

ஒற்றை பாடலுக்கு சமந்தா ஆடியுள்ள ஐட்டம் பாடல் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. டப்பிங் படமாக இருந்தாலும் நேரடி தமிழ் படத்திற்கான எதிர்பார்ப்பை தங்களது விளம்பர யுக்தி மூலம் ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு படங்களும் தமிழகத்தில் உள்ள 70%திரையரங்குகளில் வெளியாவதால் எஞ்சியுள்ள 30% திரைகளை வெளியாகும்

எட்டு நேரடி தமிழ் படங்கள் பங்குபோட்டுக்கொள்ளும் ஆங்கில படங்கள், பிரம்மாண்ட படங்களின் ஆதிக்கத்திற்கு முன்பு சிறுபட்ஜெட்டில் தயாரிக்கப்படும் நேரடி தமிழ் படங்கள் ரிலீஸ் காலத்தில் காணாமல் போகும் அவலம் தமிழ்நாட்டில் தொடர்கதையாக உள்ளது.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share