xமும்பை டெஸ்ட்: தொடரையும் கைப்பற்றிய இந்தியா!

entertainment

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 325 ரன்கள் குவித்தது. பின்னர் நியூசிலாந்து அணி 62 ரன்னில் சுருண்டது.

263 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தாலும் இந்தியா பாலோ-ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. மொத்தமாக 539 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால், நியூசிலாந்துக்கு 540 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மிகப்பெரிய இலக்கை நோக்கி நியூசிலாந்து களம் இறங்கியது. நேற்றைய மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. நிக்கோல்ஸ் 36 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று (டிசம்பர் 6) நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. நிக்கோல்ஸ் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேமிசன் (0), டிம் சவுத்தி (0), சோமர்வில் (1) அடுத்தடுத்து ஆட்டமிழக்கவும், ரவீந்திரா 18 ரன்னில் வெளியேறவும் நியூசிலாந்து 167 ரன்னில் சுருண்டது.

இதனால் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அஷ்வின், ஜயந்த் யாதவ் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஏற்கெனவே டி20 போட்டியில் 3-0 என்று வெற்றி பெற்றிருந்த இந்தியா, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரையும் 1-0 எனக் கைப்பற்றியது.

**-ராஜ்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *