த்ரிஷ்யம் 2 தெலுங்கு: மக்களிடம் வரவேற்பு பெறுமா?

Published On:

| By Balaji

r

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த ‘த்ரிஷ்யம்’ மலையாளப் படம் 2013ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன்பின் இப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, சிங்களம் மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது. தற்போது இந்தோனேசியா மொழியில் ரீமேக் செய்து வருகிறார்கள்.

த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் பிப்ரவரி மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின் இந்த இரண்டாம் பாகத்தை தெலுங்கில் மார்ச் மாதம் தயாரிக்க தொடங்கினார்கள். தெலுங்கில் முதல் பாகத்தை நடிகை ஸ்ரீப்ரியா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்க, முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ், மீனா, நதியா உள்ளிட்டோர் இரண்டாம் பாகத்திலும் மாற்றமின்றி நடித்தனர். கொரோனா பொது முடக்கம் காரணமாக திரையரங்கில் இப்படத்தை வெளியிடுவதில் வணிகரீதியாக சிரமங்கள் இருக்கிறது.

அதனால் நவம்பர் 25ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விளம்பரத்திற்காக நேற்று (நவம்பர் 12) இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. எதிர்பார்த்த பரபரப்பும், எதிர்பார்ப்பும் கிடைக்கவில்லை. டீசருக்கு மிகச் சுமாராக 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் மட்டுமே யூடியூப்பில் கிடைத்துள்ளது. மலையாள ஒரிஜனல் த்ரிஷ்யம் 2 மிகப்பெரும் வரவேற்பை பெற்றதுபோல தெலுங்கில் தயாரிக்கப்பட்டுள்ள த்ரிஷ்யம் 2 பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெறுமா என்பது படம் வெளியான பின்னரே தெரிய வரும்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share