பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

Published On:

| By Balaji

சின்னத்திரை ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிந்து எட்டு மாதங்களுக்கு பிறகு, இந்த மூன்றாவது சீசன் தொடங்கி இருக்கிறது. கடந்த இரண்டு சீசன்களில் எட்டு போட்டியாளர்கள், எட்டு கோமாளிகள் என்று இருந்த நிலையில் இந்த சீசனில் பத்து போட்டியாளர்கள், பத்து கோமாளிகள் களம் இறங்கியுள்ளனர்.

முதல் எபிசோட்டில் இரண்டு சீசன்களில் பங்கு பெற்ற சீனியர் கோமாளிகளை வரவேற்றனர். அதன்படி சிவாங்கி, பாலா, சுனிதா, ஷக்தி, மணிமேகலை ஆகியோர் இடம் பெற்றனர். இதில் கடந்த சீசன்களில் இருந்த புகழ், ஷரத் இடம்பெறவில்லை. புது கோமாளிகளாக குரேஷி, சூப்பர் சிங்கர் புகழ் மூக்குத்தி முருகன், பரத், டிக்டாக் பிரபலம் சீதாள் கிளாரின், அதிர்ச்சி அருண் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். பின்னர், போட்டியாளர்களாக ‘பாரதி கண்ணமா’ புகழ் ரோஷினி, ‘சார்பட்டா’ சந்தோஷ், வித்யுலேகா, அந்தோனி தாசன், ஸ்ருதிகா, மனோபாலா, ராகுல் தாத்தா ஆகிய ஏழு போட்டியாளர்கள் தற்போது ஒளிபரப்பான இரண்டு எபிசோட்டுகளில் அறிமுகப்படுத்தியுள்ளனர். ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நகைச்சுவைக்காக கோமாளி பரத்தை செஃப் வெங்கடேஷ் பட் குச்சியை எடுத்து அடிப்பதும் துரத்துவதுமாக இருந்தார். வெங்கடேஷ் பட் நிஜமாகவே பரத்தை அடித்தாரா என தற்போது சர்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில், ‘இதெல்லாம் நிகழ்ச்சியின் நகைச்சுவைக்காக மட்டுமே, மற்றபடி நிஜமாக அடிப்பதோ மனம் புண்படும்படியாக நடந்து கொள்வதோ இங்கு இருக்காது’ என இந்த சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ் பட் விளக்கம் கொடுத்துள்ளார்.

கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன் ஆகிய போட்டியாளர்கள் அடுத்த வாரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படுவார்கள்.

**ஆதிரா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share