பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விட்டு விலகும் ஸ்டாலின்?

entertainment

ிஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலும் ஒன்று. முதல் பத்து இடங்களுக்குள் டி.ஆர்.பி.-யில் வரும் முக்கியமான சீரியல் இது எனும் அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் கூட்டுக் குடும்பமாக தங்களது அப்பாவின் மளிகை கடையை பார்த்துக்கொண்டு குடும்ப கதையாக நகரும் இதில் மூத்த அண்ணன் சத்தியமூர்த்தியாக ஸ்டாலின் இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சீரியல் ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகும் நிலையில் இவரது இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஸ்டாலின் இப்பொழுது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் ‘பச்சக்கிளி’ என்ற புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இதில் அண்ணன் தம்பி என மூன்று பேர் தங்களது தங்கையை பாசமாக வளர்க்கும் கதை தான் இது. அடுத்த மாதத்திலிருந்து இந்த புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஸ்டாலினுக்கு முதன்மை கதாபாத்திரம். இப்பொழுது ஒளிபரப்பாக இருக்கும் புது சீரியலிலும் இவரது கதாபாத்திரம் முதன்மையாக இருக்கிறது என்பதால், இரண்டு சீரியலில்களிலும் நடிப்பது சிரமம் என்பதால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விட்டு விலக முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இப்போது வரை ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடுகளில் ஸ்டாலின் நடித்து வருகிறார். இவர் விலகி இருப்பது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சீரியல் தரப்பில் இருந்தோ அல்லது ஸ்டாலின் தரப்பில் இருந்தோ வெளிவரவில்லை. இதற்கு முன்பு சில படங்களில் ‘தெக்கத்தி பொண்ணு’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருந்தார் என்றாலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் இவருக்கு பரவலான ஒரு அறிமுகத்தை ரசிகர்களிடையே கொடுத்தது என்பது மறுக்க முடியாதது.

**ஆதிரா. **

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *