‘தளபதி 66-ல் ஷாம்

entertainment

நடிகர் ஷாம் விஜய்யின் அடுத்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடிக்கிறார். படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். ’பூவே உனக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என விஜய்யின் ஆரம்பகால படங்களை போலவே ‘தளபதி 66’ இருக்கும் என தில் ராஜூ ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

சமீபத்தில் படத்தின் பூஜை நடைபெற்று இப்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த மாதத்தில் ஹைதராபாத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர். இந்நிலையில் படத்தில் நடிகர் விஜய்க்கு சகோதரராக நடிக்க 90’, 80’களில் நாயகனாக வலம் வந்த நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் நடிகர் மோகனின் பெயர் முதலில் வந்தது. ஆனால், அவர் இப்போதும் கதாநாயகனாக நடித்து வருவதால் படத்திற்கு ஒப்பு கொள்ளவில்லை எனவும் அவருக்கு பதிலாக நடிகர் ஷாமிடம் படக்குழு அணுகியதாகவும் தகவல் வந்தது.

இதனை தற்போது நடிகர் ஷாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். ‘நடிகர் விஜய்யுடன் படத்தில் இணைந்து பணி புரிய ஆர்வமாக உள்ளேன்’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நடிகர் ஷாமுக்கு அனைவரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *