கண்களுக்கும் சருமத்துக்கும் நல்லது என்று என்னதான் எடுத்துச் சொன்னாலும் குழந்தைகளை, ஏன் சில பெரியவர்களைக்கூட கேரட் சாப்பிட வைப்பது சிரமமானது. இந்த நிலையில் இன்றைய ஸ்பெஷல் உணவாக இந்த கேரட் டீடாக்ஸ் ஜூஸ் செய்து கொடுங்கள். ‘நோ’ சொல்ல மாட்டார்கள். இந்த வார முதல் நாளை கேரட் ஸ்பெஷலாக கலக்குங்கள்.
என்ன தேவை?
கேரட் (நடுத்தர அளவு) – 2
இஞ்சி – அரை இன்ச் துண்டு
பைனாப்பிள் துண்டுகள் – அரை கப்
ஆரஞ்சு – ஒன்று
மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
கேரட்டை நன்கு அலசிக்கொள்ளவும். பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவவும். ஆரஞ்சைச் சாறு எடுத்து, இதர பொருள்கள் எல்லாவற்றோடும், மிக்ஸியில் போட்டு, அரைத்து வடிகட்டி அருந்தவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: உப்பு, புளி, காரம் அதிகமாயிடுச்சா… கவலைப்படாதீர்கள்!
கிச்சன் கீர்த்தனா: கம்பு இடியாப்பம்!
ஹெலிகாப்டர் ஷாட்டும் கப்பல் ஏறும் மானமும்: அப்டேட் குமாரு
சென்னையில் மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை..!