5ஆம் கட்ட மக்களவை தேர்தல்!
உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், பிஹார் மற்றும் ஒடிசாவில் தலா 5 தொகுதிகள், ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகள் என 6 மாநிலங்களில் 47 தொகுதிகளில் இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
இலவச மாணவர் சேர்க்கை!
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (மே 20) நிறைவு பெறுகிறது. இதற்கு rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
குரூப் 4 மாதிரி தேர்வு!
குரூப்-4 போட்டித் தேர்வுக்கான மாதிரித் தேர்வு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் இன்று காலை 10:00 மணி முதல் பகல் 01.30 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.
மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கு!
இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய 3 சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
கனமழை!
தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், விருதுநகர், திருப்பூர், கோவை,நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி,புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை ஐஐடியில் கலாச்சார திருவிழா!
இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் ஒன்பதாவது சர்வதேச மாநாடு சென்னை ஐடியில் இன்று தொடங்குகிறது. SPICMACAY எனப்படும் இந்த மாநாட்டில் பதிவு செய்யப்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
நேபாளத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு!
நேபாள பிரதமா் பிரசண்டா தலைமையிலான அரசு மீது இன்று (மே 20) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
உதகையில் ரயில் சேவை ரத்து!
உதகையில் கனமழை மற்றும் மண் சரிவு காரணமாக இன்று மலை ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
108 ஆம்புலன்ஸ் சேவை வேலை!
108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கான நேர்காணல் இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
பெட்ரோல் விலை 65ஆவது நாளாக இன்றும் எந்த மாற்றமின்றி ரூ 100.75 ஆகவும், டீசல் லிட்டருக்கு 92.34 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெலிகாப்டர் ஷாட்டும் கப்பல் ஏறும் மானமும்: அப்டேட் குமாரு
சென்னையில் மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை..!
ஊழல்களின் தாய் காங்கிரஸ் – மோடி தாக்கு!
தமிழக பெண்ணை மணந்த கொரிய இளைஞர்!