எடிட்டிங் மேஜையில் என்ன நடந்தது? மாஸ்டர் மூன்று மணிநேரம் வரக் காரணம்?

entertainment

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம், வருகிற ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மாஸ்டருக்கு யு/ஏ சென்சார் சான்று கிடைத்திருக்கிறது. எப்படியும் 1000 திரையரங்குகளில் வெளியிட முனைப்புக் காட்டிவருகிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். 100 சதவிகிதத் திரையரங்க அனுமதி கோரி, சமீபத்தில் முதல்வரைச் சந்தித்தார் விஜய். ஆனால், அனுமதி குறித்த அறிவிப்பு இன்னும் வந்தபாடில்லை. வெளியீட்டு நேரத்தில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ரிலீஸ் வேலைகளில் இருக்கிறார் தயாரிப்பாளர் லலித்குமார்.

இந்த நிலையில், படத்தின் ஒட்டுமொத்த நீளம் மூன்று மணிநேரம். இதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக ரன்னிங் டைம் இந்தப் படத்துக்குத் தான். இப்படி இருக்கையில் சிறப்புக் காட்சிகளுக்கு எப்படியும் அனுமதி கிடைத்துவிடும். ஆனால், நீளம் அதிகமாக இருப்பதால் எத்தனை சிறப்புக் காட்சிகள் திரையரங்கில் போடுவார்கள் என்ற சந்தேகத்தில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

இந்த இடத்தில் ஒரு புதிய தகவலைச் சொல்லிவிடலாம். லோகேஷ் கனகராஜ் சொன்ன நேரத்துக்குள், சொன்ன பட்ஜெட்டுக்குள் முழு படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார். ஆனாலும், குறைந்தது நான்கு மணி நேரத்துக்கு வருமளவுக்குப் படத்தை எடுத்துவிட்டாராம். நிறையக் காட்சிகளைப் படத்திலிருந்து வெட்டி தூக்கியிருக்கிறார். பல துணை நடிகர்களின் காட்சிகள், மாஸ் ஷாட்டுகள் என பல கோடி செலவில் உருவான காட்சிகளைச் சரமாரியாக வெட்டித் தூக்கியிருக்கிறார்கள். படப்பிடிப்புக்கு முன்பே ஸ்கிரிப்ட் பணியின்போதே காட்சிகளை நீக்காமல் விட்டதே, இவ்வளவு தேவையில்லாதக் காட்சிகளை எடுத்ததற்குக் காரணம் என்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான, கார்த்தி நடித்த கைதி படம், குறைவான ரன்னிங் நேரத்துடன் ஷார்ப்பாக இருக்கும். அப்படி இருக்கையில், மாஸ்டரில் அதிக காட்சிகளை எடுத்துவிட்ட காரணத்தால், ரன்னிங் டைமைக் குறைக்க முடியாமல் போய்விட்டதாம். அப்படித்தான், மூன்று மணிநேரத்தில் வந்து நின்றிருக்கிறது மாஸ்டர்.

**ஆதினி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0