Animal movie break the records

வசூல் : பதான், ஜவான் சாதனையை முறியடிக்குமா ‘அனிமல்’!

சினிமா

இந்தி மொழி சினிமா இந்தவருடத்தின் தொடக்கத்தில் வெளியான பதான் திரைப்படத்தின் மூலம் 1000 ம் கோடி ரூபாய்க்கு மேலான மொத்த வசூலை கடந்து அதல பாதாளத்தில் இருந்த இந்தி திரைப்படங்களின் பாக்ஸ்ஆபீஸ் வசூலை தூக்கி நிறுத்தி உயிர்ப்பித்தது. Animal movie break the records

பிராந்தியமொழி படங்களுடன் கூட போட்டியிட முடியாமல் பின்தங்கி,தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இந்தி திரையுலகத்திற்கு மட்டுமல்லாது,

நான்கு வருடங்களாக ஷாருக்கான் நாயகனாக நடித்த படங்கள் எதுவும் வெளிவராத சூழலில் பதான் படத்தின் வெற்றியின் மூலம் பாலிவுட்டின் பாக்ஸ்ஆபீஸ் கிங் நான் தான் என்பதை ஷாருக்கான் மீண்டும் உறுதிப்படுத்திய படம் பதான்.

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் நடித்திருந்தனர்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்காக இந்தியாவை தாக்க வரும் பாகிஸ்தான் உளவாளியான ஜான் ஆபிரகாமை, இந்திய “ரா” உளவாளியான ஷாருக்கான் வெல்வதே கதை.

உலக அளவில் இப்படம் 1052.85 கோடி வசூல் செய்துள்ளது. அதனை தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் பாக்ஸ்ஆபீஸ் வசூல் மூலம் பதான் வசூலை முறியடித்தது.

தமிழில் பல நாயகர்கள் நடிப்பில் வெளியான சமூகப்பிரச்சினை, சமகால அரசியல் படங்களில் இடம்பெற்ற பல்வேறு காட்சிகளின் தொகுப்புதான் ஜவான் படம்.

அதனை கமர்சியல் பொழுதுபோக்கு அம்சங்களுடனும், அதே சமயம் நாயகன் சமூகப் பிரச்சனைகளையும் தீர்க்ககூடியவராக இருக்கும் வகையிலான திரைக்கதை அமைப்பில் வெளியானது ஜவான்.

அப்பா, மகன் என இரு வேடங்களில் ஷாருக்கான் நடித்திருந்தார். உலக அளவில் ஜவான் சுமார் 1000 கோடிகளை கடந்து பாக்ஸ்ஆபீசில் வசூல் செய்த இந்தப் படத்தின் மூலம் அட்லி இந்தியில் இயக்குநராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் டிசம்பர் 1 அன்று ரன்பீர்கபூர், ரஷ்மிகா மந்தனா நடிப்பில், ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தயாரான’அனிமல்’ வெளியானது.

இப்படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வெளியானபோதும் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் பதான், ஜவான் போன்று கல்லா கட்டி வருகிறது.

இப்படம் வெளியான 9 நாட்களில் ரூ.660 கோடி மொத்தவசூல் செய்த அனிமல் 17 நாட்களில் 835 கோடி ரூபாய் மொத்தவசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் 1000ம் கோடி ரூபாய் மொத்த வசூலை அனிமல் படம் எட்டி பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இந்த வருடம் பதான், ஜவான் படத்தை தொடர்ந்து 1000ம் கோடி ரூபாய் மொத்த வசூல் செய்த மூன்றாவது படம் என்கிற சாதனையை அனிமல் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்!

நாளை எந்தெந்த மாவட்டங்களில் பொது விடுமுறை?: எங்கெங்கு பள்ளிகளுக்கு விடுமுறை?

Animal movie break the records

+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
3
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *