அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
பிரமாண்ட பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதில் அஜித் பெயர் அர்ஜுன் என்றும், அர்ஜுன் பெயர் ரக்ஷித் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் லாக் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி வருகின்ற ஏப்ரல் மாதம் 26-ம் தேதி விடாமுயற்சி ரிலீஸ் ஆகவிருக்கிறதாம். மே 1 அஜித் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட்டாக படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்து இருக்கிறதாம்.
இந்த படத்தினை முடித்து விட்டு அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்க அஜித் முடிவு செய்துள்ளார். அதனால் படக்குழு தற்போது படப்பிடிப்பினை விரைந்து நடத்தி வருகிறதாம்.
தயாரிப்பு தரப்பில் இருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகுமா? என்பதை நாம் வழக்கம்போல காத்திருந்து பார்க்கலாம்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…