தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
டாடா
லிஃப்ட் படத்தை தொடர்ந்து கவின் நடித்த டாடா திரைப்படத்தை கணேஷ் கே.பாபு இயக்கினார். அபர்ணா தாஸ், ஹரிஷ், பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கல்லூரி மாணவன், பொறுப்பான அப்பா என தன்னுடைய சிறப்பான நடிப்பை கவின் இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். திரையரங்கை தொடர்ந்து இந்தப் படம் பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் ஃபிரைமில் ரிலீஸாகிறது.
ரன் பேபி ரன்
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான படம் ரன் பேபி ரன். வழக்கமாக நகைச்சுவை படத்தில் நடிக்கும் ஆர்.ஜே. பாலாஜி இம்முறை த்ரில்லர் கதையை தேர்வு செய்து நடித்து இருக்கிறார்.
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, இஷா தல்வார், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா தமிழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் பிப்ரவரி 10 ஆம் தேதி டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.
கிறிஸ்டி
மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மலையாள படம் கிறிஸ்டி. வயதான பெண்ணை காதலிக்கும் சிறுவனின் கதையை அடிப்படையாக கொண்டது.
இந்த படம் வரும் 9ஆம் தேதி டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.
ராணா நாயுடு
வெங்கடேஷ் மற்றும் ராணா முக்கிய வேடங்களில் நடித்துள்ள வெப் சீரிஸ் ராணா நாயுடு.
இந்தத் தொடர் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா: நெத்திலிக் கருவாடு வறுவல்!