என்னுடைய 12 வருடத்தின் மொத்த கனவும் டாடா படத்தில் உள்ளது என்று நடிகர் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து அனைவருக்கும் அறிமுகமானவர் கவின். பிக்பாஸ் வீட்டிற்கு சென்று பிரபலமானார். இதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நட்புனா என்னனு தெரியுமா, லிப்ட் ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார்.
கணேஷ் கே பாபு இயக்கத்தில் இவர் நடித்த டாடா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தநிலையில் நடிகர் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான்கு வருடங்களுக்கு பிறகு என்னுடைய டாடா திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது. இது நான் நடிக்கும் மூன்றாவது படம். என்னுடைய 12 வருடத்தின் மொத்த கனவும் இந்த படத்தில் உள்ளது.
இந்த நிலைமைக்கு நான் வந்ததற்கு அனைவருக்கும் நன்றி. டாடா படத்தை பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஒரு சாதராண பையனுடைய வாழ்க்கை தான் இந்த படத்தின் கதை. டீசர் ட்ரெய்லரில் ஜாலியான படமாக காட்டியிருந்தாலும், இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான படம். மிகவும் நிதானமாக இருக்கும். நீங்களும் நிதானமாக இந்த படத்தை பார்க்க வேண்டும். குடும்பமாக அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
’கியூட்’ தேர்வு: விண்ணப்ப படிவ விநியோகம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!