தமிழில் வெற்றிகரமான சமையல் நிகழ்ச்சியாக விளங்குகிறது குக் வித் கோமாளி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
சமைக்க தெரியாத கோமாளிகளை வைத்துக்கொண்டு படாத பாடுபடும் போட்டியாளர்களின் நிலைமை வேடிக்கையாக இருக்கிறது. காமெடிக்கு பஞ்சம் இல்லாத இந்த நிகழ்ச்சியின் புதிய சீசன் தற்பொழுது துவங்கியுள்ளது.
முன்னதாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் இதிலிருந்து விலகினார்கள். அதனைத் தொடர்ந்து நடுவராக இருந்த வெங்கடேஷ் பட்டும் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
மிகுந்த சலசலப்பை உருவாக்கிய இந்த செய்தியை விஜய் டிவி சரி செய்து, புதிய சீசனை துவங்கி உள்ளனர். அதன்படி குக் வித் கோமாளி சீசன் 5-வில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் புகழ், குரேஷி, சுனிதா மட்டும் இல்லாமல் விஜய் டிவி பிரபலங்களான ராமர், நாஞ்சில் விஜயன், வினோத், மற்றும் செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதா, தெய்வமகள் சீரியலில் நடித்த நடிகை ஷபி ஷப்னம் போன்றவர்களும் கோமாளிகளாக களமிறங்குகின்றனர்.
இந்நிலையில் சுடச்சுட புதிய புரோமோவை வெளியிட்டுள்ளனர். அதில் போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி பிரபல யூடியூபரான இர்பான், விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, வசந்த் வசி, விடிவி கணேஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா போன்றவர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
மேலும் குக் வித் கோமாளி சீசன் 5 வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி துவங்கி, சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நடிகை தமன்னாவுக்கு சைபர் கிரைம் போலீஸ் சம்மன்!
அப்புவோட பிரச்சினை… அம்பேத்கர் சிலையை குறிவைத்து பெட்ரோல் குண்டு! கடலூரில் நடந்தது என்ன?
இல்லத்தரசிகளுக்கு இனிய செய்தி : குறைந்தது தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?
உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் பலி… விசாரணைக்கு உறுதியளித்த அமைச்சர்